கச்சா எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு விதிக்கும் நடைமுறையை ஜி7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. ரஷ்யாவின் விலையானது தற்போது உச்ச விலைக்கு மேலாக இருந்து வருகின்றது.
அமெரிக்காவும் அதன் நடட்பு நாடுகளும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை விரும்புகின்றன. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் குளிர் காய விரும்புகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
குறைந்த விலையில் எண்ணெய்
அதாவது ரஷ்யாவின் எண்ணெய் வேண்டும். ஆனால் அது குறைந்த விலையில் வேண்டும் என்று நினைக்கின்றன. ரஷ்யாவின் எண்ணெய் மூலமாக கிடைக்கும் இந்த வருவாயானது, ரஷ்யாவின் வருவாயில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இது விளாடிமிர் புடினின் போர் மெஷினுக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
எதற்காக உச்ச வரம்பு?
உச்ச வரம்பு விலை கட்டுப்பானது ரஷ்யாவின் வேகத்தினை குறைக்க வழிவகுக்கலாம் என மேற்கத்திய நாடுகள் நினைக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் இந்த உச்ச வரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிக்க திட்டமிட்டுருந்ததும், ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவினை பெரிதும் எரிபொருளுக்காக சார்ந்திருக்கின்றன. இந்த நிலையில் ரஷ்யாவினை முழுமையாக தடை செய்ய முடியாமல் தவித்து வந்தன. எனினும் படிப்படியாக இறக்குமதியினை தடை செய்து கொள்வதாக அறிவித்துள்ளன.
முன்பை விட நெகிழ்ச்சி
இதற்கிடையில் தான் தற்போது ஜி 7 நாடுகளின் உச்ச வரம்புக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ரஷ்யா எண்ணெய்யை தடை செய்யாமல் தங்களுடன் குறைந்த விலையில் வைத்திருக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளன. ரஷ்யாவின் ஏற்றுமதியானது முன்பை விட நெகிழ்ச்சியாக இருக்கும் என்பதை காட்டுகிறது.
ரஷ்ய அமைச்சர்கள் கருத்து
விலை உச்சவரம்பு என்னவாக இருக்கும் என்னவாக இருக்கும் என்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை. நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்களுடன் தொடர்ந்து உள்ள கூட்டாளிகள், அதனை கருத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என ரஷ்ய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இலக்கு யார்?
ஜி7 நாடுகள் பெரும்பாலும் ஏற்கனவே, எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியினை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆக ஜி7 நாடுகளின் முடிவானது சீனா, இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளை இலக்காக கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் எந்த விதமான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால் அமெரிக்கா அவர்கள் ஒரு பேரம் பேசும் சிப்பாக பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்திரத்தன்மை
இந்த விலை உச்ச வரம்பானது ரஷ்யா எண்ணெய்யை உலகம் முழுக்க சர்வதேச சந்தையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் சப்ளையில் தாக்கம் இருந்து வரும் நிலையில், இதனை நுகர்வோர் மற்றும் வணிகத்தினை மேம்படுத்தலாம். ரஷ்யாவின் எண்ணெய் தள்ளுபடிகளூக்காக பேரம் பேசுவதற்கும், எண்ணெய் விலையில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பயன்படும் என்றும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் சூசகம்
மொத்தத்தில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் மேற்கத்திய நாடுகள் குளிர்காய விரும்புகின்றன எனலாம். இப்பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன.


Click it and Unblock the Notifications