ஒபெக் முடிவால் உலக நாடுகளுக்கு என்ன பிரச்சனை.. சாமானிய மக்களுக்கு காத்திருக்கும் சவால்கள்?

உலக அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் தேவை குறையலாம் என எண்ணெய் உற்பத்தி நாடுகள் (OPEC), உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கு முக்கிய காரணம் சப்ளை அதிகரிப்பு மற்றும் தேவை சரியலாம் என்பதே முக்கிய காரணம் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

உற்பத்தி குறைப்பு முடிவு

உற்பத்தி குறைப்பு முடிவு

ஓபெக் நாடுகளின் இந்த முடிவு கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல் விலை உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபெக் இந்த முடிவினால் அடுத்த மாதத்தில் இருந்து, ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்கள் உற்பத்தியினை குறைக்க முடிவு செய்துள்ளது.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

சவுதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர் தேவை குறையலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விலை குறைய வழிவகுக்கலாம் என உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் பயணங்கள் குறையலாம். இதனால் தேவையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

24% சரிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய்

24% சரிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது கடந்த ஜூன் மாதத்தில் பேரலுக்கு 123 டாலர்கள் என்ற லெவலில் இருந்தது. இது தற்போது 93.50 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது சுமார் 24% சரிவில் காணப்படுகின்றது. சர்வதேச அளவில் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் இருந்து வரும் நிலையில், ரெசிசனை எட்டலாம் என அச்சமும் இருந்து வருகின்றது.

செலவு அதிகரிக்கலாம்

செலவு அதிகரிக்கலாம்

இதற்கிடையில் அதிகரித்து வரும் எனர்ஜிகளின் விலையானது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது இந்தியா மட்டும் அல்ல, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளையும் மேலும் பாதிக்கலாம். குறிப்பாக எண்ணெய் விலை, கேஸ் விலை, மின்சார கட்டணம் என அனைத்தின் விலையும் கூடலாம். இது செலவினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

ரஷ்யா - சீனா - இந்தியா

ரஷ்யா - சீனா - இந்தியா

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த கூறி வருகின்றன. எனினும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் இன்றும் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றன. ஆக அதிக சப்ளையானது விலையினை குறைக்க வழிவகுக்கலாம் என எண்ணெய் உற்பத்தி நாடுகள் எதிர்பார்க்கின்றன.

ரஷ்ய எண்ணெய்க்கு தடை

ரஷ்ய எண்ணெய்க்கு தடை

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஐரோப்பிய நாடுகளும் அடங்கும்.

ஐரோப்பிய நாடுகளின் முடிவு?

ஐரோப்பிய நாடுகளின் முடிவு?

ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த ஒப்புக் கொண்ட நிலையில், படிப்படியாக குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்க உள்ளிட்ட 7 நாடுகள் ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு குறித்து விவாதித்து வருவதாகவும், இது குறித்து விரைவில் முழு அறிக்கையும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தினை முடக்க மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கையில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எப்படி பிரச்சனையாகலாம்?

இது எப்படி பிரச்சனையாகலாம்?

மேற்கத்திய நாடுகளின் விலை வரம்பு குறித்தான முடிவின் மூலம், குறைந்த விலையில் உலக நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்வது நோக்கமாக இருக்கலாம். ஆனால் ரஷ்யாவோ எண்ணெய் சப்ளையை நிறுத்தும் என சவால் விடுத்தும் வருகின்றது. இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதற்கிடையில் ஓபெக்கின் முடிவும் எதிராக வந்துள்ள நிலையில், இது அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கே பிரச்சனையாக மாறலாம். ஏற்கனவே அமெரிக்க மிக மோசமான பணவீக்கத்தினை எதிர்கொள்ளலாம். மொத்தத்தில் ரஷ்யாவினை ஒடுக்கும் முயற்சியில் மற்ற நாடுகளே பிரச்சனையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

பணவீக்கத்தினை மேலும் அதிகரிக்கலாம்

பணவீக்கத்தினை மேலும் அதிகரிக்கலாம்

ஓபெக்கின் இந்த முடிவால் மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கலாம். இது பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

நுகர்வினை குறைக்கலாம்

நுகர்வினை குறைக்கலாம்

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது அங்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தலாம். பணவீக்க அதிகரிப்பானது மேற்கொண்டு மற்ற செலவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது குறிப்பாக உணவு மற்றும் நுகர்வு உள்ளிட்டவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ரஷ்யாவின் நிலைப்பாடு

ரஷ்யாவின் நிலைப்பாடு

ஓபெக் அல்லாத மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யாவில், விலை வரம்பு நிலைக்கு முன்னதாக விலையேற்றம் என்பது பயனுள்ளதாக அமையலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எனினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகள் மூலம் ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் எண்ணெய் வழங்கி வருகின்றது.

இந்தியாவின் நிலை?

இந்தியாவின் நிலை?

இந்தியா உலகளவில் அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய இறக்குமதியாளராகும். ஆக சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தால் இது இந்தியாவினை நேரடியாக பாதிக்கும். இது பணவீக்கத்தினை தூண்டும். இது பெட்ரோல், டீசல் விலை, உணவு பொருட்கள் விலை, போக்குவரத்து செலவினங்கள் என பல அத்தியாவசிய செலவினங்களையும் பாதிக்கும். இது மேற்கொண்டு சாமானிய மக்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+