இந்திய தொழில்துறையின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள அதானி குழுமம், இப்போது உலகையே அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், ஆண்டுக்கு தலா 2 லட்சம் கோடி ரூபாய் வீதம், மொத்தம் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக கரண் அதானி அறிவித்துள்ளார்.
இது வெறும் முதலீடு மட்டுமல்ல, இந்தியாவின் உள்கட்டமைப்பு, துறைமுகங்கள் மற்றும் பசுமை எரிசக்தி துறையில் அதானி குழுமம் நடத்தப்போகும் ஒரு மாபெரும் ஆக்கிரமிப்பு. ஹிண்டன்பர்க் புயலுக்கு பிறகு, முன்பை விட பல மடங்கு வேகத்துடன் மீண்டெழுந்து உள்ள அதானி குழுமத்தின் இந்த மாஸ்டர் பிளான் பங்குச் சந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும்? எந்தெந்த பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயரப்போகின்றன?

எங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 18 ஜிகாவாட்டிலிருந்து (GW) 2030-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 50 ஜிகாவாட்டாக உயரும். துறைமுக கையாளும் திறன் ஆண்டுக்கு 600 மில்லியன் மெட்ரிக் டன்களிலிருந்து (MMTPA) 1.2 பில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும். அனல் மின் உற்பத்தி திறன் தற்போது உள்ள சுமார் 17 ஜிகாவாட்டிலிருந்து 2031-க்குள் 35 ஜிகாவாட்டாக உயரும். அதேபோல் விமான நிலைய பயணியர் கையாளும் திறன் 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியனிலிருந்து 200 மில்லியனாக வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக உலகளாவிய விநியோக சங்கிலியில், தொடர்ச்சியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவில் தொடங்கி, சூயஸ் கால்வாய் அடைப்பு, அதை தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போர் என ஏதோ ஒன்று விநியோக சங்கிலியை பாதித்துக் கொண்டே இருக்கிறது. 2020-க்குப் பிறகு, பெரும்பாலான நாடுகள் உலகளாவிய விநியோக சங்கிலியிலிருந்து, பிராந்திய விநியோக சங்கிலியை நோக்கி நகர்ந்துள்ளன. இத்தகைய இடையூறுகள் ஏற்படும் போதெல்லாம், அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மேலும் இந்தியா தன்னிறைவு அடைய நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி போன்ற மாற்று எரிபொருட்களை நோக்கி கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு என எந்த ஒரு பொருளும் பாதிப்புக்குள்ளாகும். எரிசக்தி இறக்குமதியை பொறுத்த வரை, நம் நாட்டை எப்படி தன்னிறைவு அடைய செய்வது என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒரு நாடாக நமக்கு எது சரியோ, அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும். நம்மிடம் நிலக்கரி முதல் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி வரை பல வளங்கள் உள்ளன. நாட்டிற்கு எது முக்கியம், நம்முடைய பலம் என்ன என்பதை பொறுத்து நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எங்களுடைய பலம் என்னவென்பது எங்களுக்கு தெரியும். எண்ணங்கள் தெளிவாக இருந்தால், தேவையில்லாத விமர்சனங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை. நாங்கள் பணத்தை ஈட்டித் தரும் கடினமான சொத்துக்களை உருவாக்குகிறோம். இவை வெறும் மதிப்பீட்டு சொத்துக்கள் மட்டுமல்ல. எங்கள் தொழிலை பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியும். அதுவே நாங்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை அளிக்கிறது, இந்தியா குறித்து அதானி குழுமம் மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளது.
அரசாங்கம் வகுத்துள்ள இலக்குகளை இந்தியா அடைய வேண்டுமென்றால், அதற்கு உள்கட்டமைப்பு தான் மிக முக்கியமான அடித்தளம். சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றால், எந்தவிதமான உற்பத்தித் துறையும் வளர்ச்சி அடைய முடியாது என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் அடுத்த சில ஆண்டுகளில் அதானி குழுமம் அடுத்த கட்டத்தை நோக்கி பாய தயாராகி வருகிறது. இதனால் அதானி குழும பங்குகளும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications