கூமாப்பட்டி தமிழ்நாட்டில் தற்போது இந்த பெயரை உச்சரிக்காத நபர்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் எங்கும் இந்த கூமாப்பட்டி குறித்து தான் பேசப்பட்டு வருகிறது . இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் கூமாப்பட்டி தங்கப்பாண்டியன்.
சமூக வலைதளங்களில் டிரெண்டான ஒரு நபராக மாறி இருக்கிறார் தங்கப்பாண்டியன். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது கூமாப்பட்டி என்ற சிறிய கிராமம். இந்த ஊருக்கு அருகே தான் பிளவக்கல் அணை இருக்கிறது. அழகான, இயற்கை சூழல் நிறைந்த இந்த கூமாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் தங்கப்பாண்டியன்.

கூமாப்பட்டி தங்கபாண்டியன் என்ற பெயரில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரிலீஸ் வெளியிட்டு வருகிறார். அண்மையில் இவர் வெளியிட்ட ஒரு ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் பயங்கர டிரெண்டாக மாறியது. ஏங்க... ஊட்டி ,கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம் நம்ம ஊரு கூமாப்பட்டிக்கு வாங்க .. சொர்க்க பூமிங்க .. தண்ணிய பாருங்க சர்பத் மாதிரி இருக்கு.. தென் மாவட்டங்களில் கூமாபட்டி ஒரு தனி ஐலேண்ட்.. என பேசினார்.
இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்றது. பல்வேறு இளைஞர்களும் கூமாப்பட்டி எங்கே இருக்கிறது என தேடத் தொடங்கினர். இதனால் கூமாப்பட்டி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் டிரெண்டானது. பலரும் கூமாப்பட்டி நோக்கி படை எடுக்க தொடங்கினர். தங்கபாண்டியும் கூமாப்பட்டி தங்கபாண்டி என்ற பெயரில் தற்போது இண்டெர்நெட் ஹீரோவாக மாறி இருக்கிறார் .
விளம்பரங்களில் கூட நடிக்க தொடங்கிவிட்டார் , தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தற்போது பிசியாக பங்கேற்று இருக்கிறார் . இவர் வெளியிடக்கூடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெறுகின்றன .இதற்கிடையே கூமாப்பட்டி தங்கபாண்டியின் வீடியோவை தொடர்ந்து அந்த கிராம மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசே 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது . அந்த அளவிற்கு இந்த ஊரும் தங்கபாண்டியும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கின்றனர்.

இந்த பிரபலத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனரான சி.கே. குமரவேல் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில தினங்களுக்கு முன்பு நான் கூமாப்பட்டி தங்க பாண்டியனின் ஏங்க என ஆரம்பிக்கும் அந்த வைரல் வீடியோவை நான் பார்த்தேன். மக்கள் நினைக்கிறார்கள் இந்த வீடியோக்கள் பைசான்ஸாக தான் வைரலாகி விடுகின்றன என்று ஆனால் உண்மை அது இல்லை என கூறியுள்ளார்.
அதிர்ஷ்டம் மட்டுமே கூமாபட்டி தங்கப்பாண்டியனின் வெற்றிக்கு காரணம் அல்ல என குறிப்பிட்டு இருக்கிறார் .தங்கபாண்டியன் வெறுமனே வீடியோ பதிவு செய்து வியூஸ் வர வேண்டும் என காத்திருக்கவில்லை மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மக்களை எங்கேஜ் செய்யக்கூடிய வகையிலும் திட்டமிட்டு தன்னுடைய வீடியோக்களை அவர் வடிவமைக்கிறார் என குமரவேல் தெரிவித்திருக்கிறார்.
சிக்மன்ட் பிராட் ,ஜோசப் முர்ஃபி, வில்லியம் ஜேம்ஸ் போன்ற நபர்களின் புத்தகங்களை படித்து உளவியல் ரீதியிலான விஷயங்களை கற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தான் இவர் தன்னுடைய வீடியோக்களை வடிவமைப்பதாக குமரவேல் சுட்டிக்காட்டி இருக்கிறார். மக்களுடன் எப்படி தொடர்பு கொள்ள வெகுஜனத்திடம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தான் இவர் வீடியோக்களை வடிவமைக்கிறார் என குறிப்பிட்டு இருக்கிறார்.
உணர்வு ரீதியாக மக்களிடம் தொடர்பு கொள்ளும் கலையை கற்றுக் கொண்டுதான் இப்படி வைரலான நபராக கூமாப்பட்டி தங்கபாண்டியன் மாறி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் சி. கே. குமரவேல் , அவருடைய இந்த வீடியோக்கள் கூமாப்பட்டி என்ற கிராமத்திற்கு 10 கோடி ரூபாய் அரசின் மேம்பாட்டு பணிகளை கொண்டு வர செய்திருக்கிறது என கூறுகிறார்.
நான் கூமாப்பட்டி தங்கப்பாண்டியனை சந்தித்தேன் அவருடைய உத்திகளை கேட்டு ஷாக் ஆனேன், அவருடைய வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி தருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். இவரை போல மேலும் பல கிரியேட்டர்கள் தற்போது நமக்கு தேவை என குறிப்பிட்டு இருக்கும் குமரவேல் வெறுமனே வைரலாக வேண்டும் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இல்லாமல் உண்மையான மாற்றங்களை கொண்டு வருவதற்காக பாடுபடும் கிரியேட்டர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் என கூறுகிறார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications