சொத்துப்பத்து எதுவும் இல்லாமல், கைநிறைய சம்பளம் தரும் ஐடி வேலையும் கூட இல்லாமல், ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனரால், 36 வயதிலேயே கோடீஸ்வரர் ஆக முடியுமா? நிச்சயம் முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார் ஒரு 36 வயது சாதனையாளர். பூர்வீகச் சொத்து என்ற பாதுகாப்பு கவசம் ஏதும் இன்றி, குடும்பத்தின் ஒற்றை வருமானத்தை மட்டுமே நம்பி, முறையான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடான முதலீடுகள் மூலம் 1 கோடி ரூபாய் என்னும் மைல்கல்லை அவர் எட்டிய விதம் ஆச்சரியமானது தான். ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, காலத்திற்கு ஏற்ற முதலீடுகளைச் சரியாகக் கையாண்டாலே, நாமும் அவரை போல் கோடீஸ்வரர் ஆக முடியும். இருப்பினும் அந்த இளைஞரின் ரகசிய யுக்திகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இளம் கோடீஸ்வரரின் ரெட்டிட் பதிவு!
இன்றைய காலத்தில் கோடீஸ்வரர் என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. குறிப்பாக உதவிக்கு யாரும் இல்லாமல், பூர்வீக சொத்தும் இல்லாமல், குடும்பத்தில் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் சூழலில் அது சாத்தியமே இல்லை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான ஒன்று என இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆங்கில செய்தித்தளம் ஒன்று ரெடிட் தளத்தில் வெளியான பதிவு அடிப்படையில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இது நிச்சயம் இளம் முதலீட்டாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கலாம். அதன்படி 36 வயதான ஒரு ரெட்டிட் பயனர், தனது விடாமுயற்சியாலும், முறையான திட்டமிடலாலும் இளம் வயதிலேயே 1 கோடி ரூபாய் என்ற மாபெரும் இலக்கை எட்டியதை பகிர்ந்துள்ளது. அப்பதிவின் படி அவர் தனது 32 வயதான மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், தன்னுடைய ஒற்றை சம்பளத்தில் குடும்பத்தையும் பராமரித்து வந்துள்ளார்.
மேலும் அந்த பதிவை மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கோ அல்லது ஒப்பிட்டுப் பார்ப்பதற்கோ அல்ல, தனது தனிப்பட்ட சாதனையை தெரிவிப்பதற்காகவே பகிர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது வெற்றியின் அடிப்படை மந்திரங்களாக, நிலையான சேமிப்பு, கட்டுகோப்பான முதலீடு, ஆடம்பரத்தை தவிர்ப்பது என சுட்டிக் காட்டியுள்ளார்.
2022-க்கு பிறகு தான் வேகம்!
ரெட்டிட் பயனரானவர், 2016லிலேயே வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும், ஆனால் உண்மையான முதலீடு என்பது 2022-க்கு பிறகு தான் தொடங்கியது. திருமணத்திற்குப் பிறகே, முக்கிய செலவுகளுக்கு பின்னர் தான் பணத்தை பெரிய அளவில் சேமிக்க முடிந்தது. முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தனது முதலீடுகளை தெளிவாக பிரித்தும் முதலீடு செய்துள்ளார்.
எதில் முதலீடு?
அவரின் பெரும்பகுதி முதலீடானது தங்கத்தில் தான் இருந்துள்ளது. அடுத்தபடியாக மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகள் இருந்துள்ளது. அடுத்து பாதுகாப்பிற்காக கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளார். உண்மையில் அவரது நிகர மதிப்பு 1.3 கோடி ரூபாய்க்கும் மேல் இருந்திருக்கும். ஆனால், ஒரு வீடு வாங்குவதற்கு 30 லட்சம் ரூபாயை முன் பணமாக செலுத்தியதால், அதைத் தனது ஓய்வுக்கால நிதியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
வீடு மற்றும் கடன் விவரம்
அந்த பயனர் வசிக்கும் வீட்டின் தற்போதைய மதிப்பு 90 லட்சம் ரூபாய் என்றும், மீதமுள்ள வீட்டுக் கடன் 63 லட்சம் ரூபாய் என்றும், வீட்டுக் கடனாக மாதந்தோறும் மாத தவணையாக 55,000 ரூபாயும் கட்டி வருகிறார்.
நிம்மதியே முக்கியம்!
தனது வாழ்க்கை முறையைப் பற்றிச் கூறியுள்ளவர், ஆடம்பரம் என் நோக்கமல்ல என்பதைத் தெளிவாக பதிவு செய்துள்ளார். தனது வருமானத்தை விட, செலவுகளை மிகக் குறைவாகவே வைத்துள்ளார். அதோடு விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதை தவிர்த்தும், பயணம் செய்வது மட்டுமே அவருக்குப் பிடித்த ஒரே செலவு. அதற்காகத் தனியாக டிராவல் ஃபண்டில்(Travel Fund) முதலீடு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரின் இலக்கு ஆடம்பரமான வாழ்க்கை அல்ல. நீண்ட கால நிலைத்தன்மை, சுதந்திரம் மற்றும் நிதிச் சுதந்திரம் மட்டுமே என கூறுகிறார்.
எதிர்கால இலக்கு!
தற்போது ஒரு கோடி ரூபாய் இலக்கை எட்டியிருந்தாலும், ஓய்வு பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு நெகிழ்வான திட்டத்தை வைத்துள்ளதாகவும், 40-களின் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் 4 - 5 கோடி ரூபாய் வரை சேமிக்க வேண்டும். ஓய்வு காலத்தில் வேலை செய்வது என்பது கட்டாயமாக இருக்க கூடாது. அது ஒரு விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் இப்பதிவில் இருந்து நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது, ஆடம்பரத்தை அடக்கி, சேமிப்பை சீராக்கி, முதலீட்டை முறைப்படுத்தினாலே எல்லோருக்கும் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமே..
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications