பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவை, சனிக்கிழமை, அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (Unified Pension Scheme - UPS) ஒப்புதல் அளித்து நடைமுறை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விஷயத்தை, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்படும். மாநில அரசுகள் UPS இல் சேர்க்கப்பட்டால், இத்திட்டத்தால் பயன்படுவோர் எண்ணிக்கை சுமார் 90 லட்சமாக உயரும். மத்திய அரசின் கணக்குகள் படி, நிலுவையில் உள்ள தொகைக்கான செலவு ரூ. 800 கோடியாக இருக்கும். முதல் ஆண்டில் வருடாந்திர செலவு சுமார் ரூ. 6,250 கோடி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்களுக்குத் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மற்றும் UPS ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஏற்கனவே உள்ள மத்திய அரசு NPS சந்தாதாரர்களுக்கும் UPS க்கு மாறும் வாய்ப்பு வழங்கப்படும். செய்தியாளர் சந்திப்பில் அரசு அதிகாரிகள், பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்கள் NPS க்கு பதிலாக UPS ஐத் தேர்வு செய்வதால் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். NPS என்பது ஏப்ரல் 1, 2004 அல்லது அதற்குப் பிறகு வேலையில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பயன்படுத்தும் ஓய்வூதிய திட்டம்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் இதோ:
உறுதியான ஓய்வூதியம்: அரசு ஊழியர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் தகுதி வாய்ந்த சேவையைச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு பணி செய்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் போது அவர்களின் கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் 10 ஆண்டுகள் சேவை செய்திருந்தால், குறைந்தபட்சம் ரூ. 10,000 மாதாந்திர ஓய்வூதியம் இந்த UPS திட்டத்தில் உறுதியளிக்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர் மறைந்துவிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் தொடர்ந்து வழங்கப்படும் என்பதையும் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (Unified Pension Scheme - UPS) மூலம் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
உறுதியான ஓய்வூதியம், உறுதியான குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய மூன்றிலும், தொழிலாளர்களுக்கான இந்தியாவின் அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-W) அடிப்படையில் உயர்வு.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications