வங்கி கணக்கு இல்லாத நபர்கள் அல்லது டிஜிட்டல் பேமென்ட் முறையை பயன்படுத்த தயங்கும் நபர்கள் தங்கள் குடும்பத்தில் அல்லது தங்களது நண்பர்களின் யுபிஐ கணக்கினை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இப்படி ஒரு வசதியை வழங்கக்கூடிய அம்சம் தான் யுபிஐ சர்க்கிள்.
அண்மையில் தான் இது இந்தியாவில் அறிமுகமானது . இதன் மூலம் யுபிஐ பயனர்கள் யுபிஐ பயன்படுத்தாத தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோருக்கு தங்களின் யுபிஐ கணக்கின் அணுகலை பகிர முடியும். இதன் மூலம் இந்த யுபிஐ பயனரின் கணக்கிலிருந்து அவர்களால் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இது வங்கி கணக்கு இல்லாதவர்கள் மற்றும் டிஜிட்டல் பேமென்ட்களை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு எளிதான தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

யுபிஐ சர்க்கிளில் யுபிஐ கணக்கு வைத்திருக்கும் நபர் பிரைமரி யூஸர் என அழைக்கப்படுகிறார், அந்த கணக்கின் அணுகலை பெறும் நபர் செகண்டரி யூசர் என அறியப்படுகிறார். பீம் -யுபிஐ, கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் எல்லாம் இந்த சேவை அமலுக்கு வந்துவிட்டது.
உதாரணமாக பீம் செயலியில் எப்படி யுபிஐ சர்க்கிளை பயன்படுத்துவது என தெரிந்து கொள்வோம்.
1. பீம் செயலியை ஓபன் செய்து யூபிஐ சர்க்கிள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு புதிய பக்கம் வரும் . அதில் Add Family or Friends என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
2. அடுத்ததாக நீங்கள் உங்களது நண்பர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ சேர்க்க 'Add to my UPI Circle' என்ற ஒரு பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதில் புதிய பக்கம் ஓபன் ஆகும் அதில் உங்களுடைய யுபிஐ சர்க்கிளில் நீங்கள் யாரை சேர்க்க விரும்புகிறீர்களோ அவர்களின் போன் நம்பர் கேட்கப்படும் .அந்த எண் உங்களுடைய காண்டாக்ட் லிஸ்டில் இருந்தால் மட்டுமே உங்களால் இதில் அவர்களை சேர்க்க முடியும்.
3. அடுத்ததாக 'spend with limits' or 'approve every payment' என இரண்டு விருப்பங்கள் காட்டும். இதில் spend with limits என்றால் உங்கள் கணக்கில் உங்கள் சர்களில் இருக்கக்கூடிய அந்த செகண்டரி யூசர் குறிப்பிட்ட அளவிலான தொகையை மட்டுமே பரிவர்த்தனையாக மேற்கொள்ள முடியும். 'approve every payment' என்பதில் செகண்டரி யூசர் மேற்கொள்ளும் எந்த ஒரு பரிவர்த்தனையும் நீங்கள் அனுமதி தந்தால் மட்டுமே அவர்களால் மேற்கொள்ள முடியும். இதில் உங்களுக்கு தேவையான ஒரு ஆப்ஷனை தேர்வு செய்து விட்டு நீங்கள் Proceed என்பதை வழங்கலாம்.
4. அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட யுபிஐ செயலிகளில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
5. ஒருவேளை spend with limits என்பதை தேர்வு செய்தால், allowed monthly spends, end date of this authorisation, your bank account from which the money is to be deducted ஆகிய மூன்றுக்கும் நீங்கள் விடை அளித்து 'Proceed' கொடுத்து, UPI PIN மூலம் அங்கீகரித்தால் யுபிஐ சர்க்கிள் ரெடி.
6. பொதுவாக உங்கள் பெற்றோர் , வீட்டில் உள்ள வயதானவர்களை நீங்கள் இதில் சேர்த்தால் இருவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications