யென் கரன்சி டிரேட் என்ற சொல் இன்று இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது, இது உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மிகவும் எளிமையான சொற்களில் விளக்கும் ஒரு முயற்சி தான் இந்த கட்டுரை.
Yen Carry Trade என்றால் என்ன?: இது எப்படி தொடங்கியது என்பதைப் புரிந்து கொள்ள முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். 1980 களின் பிற்பகுதியில் ஜப்பான் ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை பபுள் வெடிக்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டு இருந்தது. ஜப்பான் மத்திய வங்கி மிக விரைவாக பங்குச் சந்தை குமிழையும், மெதுவாக ரியல் எஸ்டேட் குமிழையும் உடைக்க வட்டி விகிதங்களை உயர்த்தியது.

வட்டி விகிதங்களை உயர்த்தி பபுள் உடைத்த பிறகு, ஜப்பான் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான் வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்கியது, இந்த பாதையில் கடந்த 30 வருடங்களாக வட்டி விகிதங்கள் 0% அல்லது 0.10% இதற்கு மத்தியிலேயே இருந்தன.
இதன் பொருள் ஜப்பானில் நிலையான வருமான முதலீடுகளில் (அதாவது, பத்திரங்கள் அல்லது வங்கி வைப்புத்தொகை) பணத்தை சேமிக்க விரும்புவோர் கிட்டத்தட்ட ஜீரோ வருமானத்தை ஈட்டினர். இதனால் ஜப்பான் மக்கள் ஜப்பான் வீட்டு வெளியே வருமானத்தை தேடும் பணத்திற்கு வழிவகுத்தது.
யாரும்மா நீங்கயெல்லாம்..?: இதன எழுச்சி காரணமாக ஜப்பான் நாட்டில் சில இல்லத்தரசிகள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க சந்தைகளில் வர்த்தகம் செய்ய இரவு முழுவதும் விழித்திருப்பது பெரிய டிரெண்டாக மாறியது. இல்லத்தரசிகள் களத்தில் இறங்க முக்கியமான காரணம் 0% வட்டி என்பதால் யென் நாணயத்தில் பணத்தை கடன் வாங்கி, அதை வெளிநாட்டு கரன்சிகளாக மாற்றி, ஜப்பானில் கிடைப்பதை விட அதிக வருமானம் தரும் பத்திரங்கள் மற்றும் பிற நிலையான வருமானம் தரும் சொத்துக்களில் முதலீடு செய்தனர்.
காலப்போக்கில் இந்த இல்லத்தரசிகள் Mrs Watanabes என்று அழைக்கப்படத் தொடங்கினர், மேலும் இவர்களின் பங்கீடு வெளிநாட்டு பரிமாற்ற சந்தையில் 30% ஆக உயர்ந்தது. Mrs Watanabes-ன் வர்த்தக உத்தி தான் யென்-கேரி டிரேட் என்று அழைக்கப்பட்டது, இது மிகப்பெரிய அளவில் லாபத்தை கொடுத்த நிலையில உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும் இந்த முறையை பயன்படுத்த துவங்கி இந்த முறை பெரிய அளவில் டிரெண்டானது. டாட்-காம் பபுள் வெடித்த போது அமெரிக்காவிற்கு வந்த பணத்தில் பெரும்பகுதி யென்-கேரி டிரேடின் மூலமாக தான் முதலீடு செய்யப்பட்டது.
கேரி டிரேட் பெயர்: பின்னாளில் இது கேரி டிரேட் என்று பொது பெயரை பெற்றது, ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் (பத்திரங்கள் அல்லது பங்கு முதலீட்டில்) ஈட்டிய வருமானத்திற்கும் யெனில் கடன் வாங்கிய வட்டிக்கும் இடையிலான வித்தியாசத்தை தான் கேரி என அழைக்கப்படுகிறது.
ஜப்பான் யென் மற்ற நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக, முக்கியமான அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பு அதிகரிக்காத வரை இந்த உத்தி சிறப்பாக செயல்பட்டது. எப்போது அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து யென் மதிப்பு அதிகரிக்க துவங்கியதோ டாப்பா டான்ஸ் ஆன துவங்கியது.
உதாரணம்: இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ளவோம் வாங்க. 1995 ஜனவரியில், ஒரு டாலர் சுமார் 100 யென் மதிப்புடையது. இந்த நேரத்தில் ஒரு Mrs Watanabes ஒரு வருடத்திற்கு 5% நிலையான வட்டி விகிதத்தில் டாலர் நாணயத்தில் ஒரு மில்லியன் யென் முதலீடு செய்ய முடிவு செய்கிறார்.
அவர் இந்த பணத்தை வருடத்திற்கு 1% விகிதத்தில் யெனில் கடன் வாங்கினார். அவர் செய்ய வேண்டிய முதல் விஷயம் தனது யெனை டாலராக மாற்றுவதுதான். $1 = 100 யென் என்றால், நாணய மாற்றுதல் செலவுகள் எதுவும் இல்லாமல், தனது ஒரு மில்லியன் யெனுக்கு $10,000 பெற்றுவார்.
இது 5% வட்டி விகிதத்தில் வருமானம் அளிக்கும் முதலீட்டு திட்டத்தில் செய்யப்பட்டது. 1996 ஜனவரியில் அதாவது ஒரு வருடத்திற்குப் பிறகு, $10,000, $10,500 ஆக அதிகரித்தது. Mrs Watanabes இந்த பணத்தை மீண்டும் யெனாக மாற்ற முடிவு செய்தார். அந்த நேரத்தில், ஒரு டாலர் 106 யென் மதிப்புடையது. அவர் சுமார் 1.11 மில்லியன் யென் ($10,500 x 106) அல்லது 11% வருமானம் பெறுவார். அவர் கடன் வாங்கிய பணத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கரும். எனவே அவளுடைய மொத்த வருமானம் 10%.
டாலர் மதிப்பில் அவளுடைய 5% வருமானம் யென் மதிப்பில் 10% வருமானமாக மாற்றப்படுகிறது. ஏனெனில் டாலருக்கு எதிராக யென் நாணயம் மதிப்பை இழந்தது. எனவே இது அவளுக்கு இரட்டை லாபத்தை கொடுத்தது.
டாப்பா டான்ஸ் ஆடினால் என்ன நடக்கும்..?: ஆனால் டாலருக்கு எதிராக யென் மதிப்பு குறைவதற்கு பதிலாக, யென் உண்மையில் உயர்ந்தால் என்ன நடக்கும். இதை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டால் 1996 ஜனவரியில் ஒரு டாலர் 95.5 யென் மதிப்புடையது என்று வைத்துக்கொள்வோம். இந்த விகிதத்தில் Mrs Watanabes ஆண்டு இறுதியில் பெற்ற $10,500 யெனுக்கு மீண்டும் மாற்றும் போது 1 மில்லியன் யென் ($10,500 x 95.5) மதிப்புடையதாக இருக்கும். எனவே Mrs Watanabes யெனில் கடன் வாங்கிய பணத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டியிருந்ததால் இழப்பு ஏற்படும்.
இதில் விஷயம் என்னவென்றால், யென் கரன்சி டிரேட் லாபகரமானதாக இருக்க, யென் டாலருக்கு எதிராக நிலையானதாக இருக்க வேண்டும் அல்லது மதிப்பை இழக்க வேண்டும். டாலருக்கு எதிராக யென் மதிப்பு உயரத் தொடங்கும் தருணத்தில், யென் மதிப்பில் வருமானம் குறையத் தொடங்குகிறது.
யென் கேரி டிரேட் ஒரு ஜாக்பாட்: 1990 களின் நடுப்பகுதியிலிருந்து 2007 இன் நடுப்பகுதி வரை பெரும்பாலான ஆண்டுகளில் யென் கரன்சி டிரேட் லாபகரமாக இருந்தது. இதேபோல 2004 மற்றும் 2007 இன் நடுப்பகுதியில், வளரும் பங்குச்சந்தை அனைத்திலும் யென் கரன்சி டிரேட் வழியாக முதலீடுகள் குவிந்தது. இதில் இந்தியாவும் அடங்கும்.
2007 ஜூனில், ஒரு டாலர் சராசரியாக 122.6 யென் மதிப்புடையது. அதன்பிறகு டாலருக்கு எதிரான யெனின் மதிப்பு உயரத் தொடங்கி ஒரு டாலருக்கு சுமார் 80 யென் வரை சென்றது. அந்த நேரத்தில் யென் கேரி டிரேட்-க்கு பெரும் தலைவலியாக இருந்து.
சாயம் வெளுத்தது..!! ஆனால் தற்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. ஜப்பான் வங்கி கடந்த வாரம் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0-0.1% -லிருந்து 0.25% ஆக உயர்த்தியது. இதன் விளைவாக யெனின் மதிப்பு டாலருக்கு எதிராக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜூலை 10 அன்று ஒரு டாலர் சுமார் 161.6 யென் மதிப்புடையதாக இருந்த நிலையில், தற்போது 143.2 யென் மதிப்புக்கு குறைந்துள்ளது.
இதனால் யென் கரன்சி டிரேட் நிலை தலைகீழாக மாறியுள்ளது. ஏற்கனவே விளக்கியது போல, யெனின் மதிப்பு அதிகரிப்பது யென் கரன்சி டிரேடின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது. இதனால், யென் நாணயத்தில் கடன் வாங்கி உலகின் பிற பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதனால் ஜப்பான் முதலீடுகள் அதிகம் கொண்ட பங்குசந்தைகள் அனைத்தும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது, அதேபோல் ஜப்பான் முதலீட்டுகள் இந்திய பங்குச்சந்தையில் எவ்வளவு உள்ளது என்பது துள்ளியமாக கூற போதிய தகவல் இல்லை.
இது இந்திய பங்குச் சந்தையை எவ்வாறு பாதிக்கும்?: யென் கரன்சி டிரேட் வழியாக இந்திய பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது உண்மையில் தெரியவில்லை. ஆனால் உலகளாவிய அளவில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்பனை செய்யும் போது, இந்திய சந்தையும் அதன் தாக்கத்தை எதிரொலித்துள்ளது.
மேலும், ரீடைல் முதலீட்டாளர்கள் இந்த சரிவை பயன்படுத்தி அதிகப்படியான பங்குகளை வாங்க முடியும், ஆனால் பங்குச்சந்தை பல காரணிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே சந்தையின் போக்கை கூர்ந்து கவனித்து மொத்தமாக கரெக்ஷன் முடிந்த பின்பு முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications