கொரோனா வைரஸ் முதலில் ஒரு லட்சம் பேரை பாதிக்க சுமாராக 67 நாட்கள் ஆனது. அடுத்த 11 நாட்களில் 1 லட்சம் பேரை பாதித்துவிட்டது.
அடுத்த 4 நாட்களில் இன்னும் ஒரு லட்சம் பேரை பாதித்து ஒட்டு மொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.
ஆக தற்போது சுமாராக நான்கு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 17,500 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இதுவரை சுமாராக 518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 10 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். மேற்கொண்டு இந்த தொற்று நோய் இந்தியாவில் பரவாமல் இருக்க, மத்திய அரசு, அடுத்த 21 நாட்களுக்கு லாக் அடவுன் அறிவித்து இருக்கிறார்கள். இந்த லாக் டவுன் இன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
எரிபொருள்
இந்த 21 நாட்கள் லாக் டவுனில் வாகனங்களில் இயக்கத்துக்கு அவசியமான, பெட்ரோல், டீசல், சி என் ஜி கேஸ், எல் பி ஜி கேஸ், பி என் ஜி கேஸ் சேவை வழங்குபவர்கள். இதைத் தாண்டி மின்சாரம், அஞ்சலக அலுவலகங்கள், சமையல்
கேஸ் கம்பெனிகள் எல்லாம் செயல்படுமாம்.
மருத்துவத் துறை
மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள், மருந்து கம்பெனிகள், மருந்துகளை சப்ளை செய்யும் கம்பெனிகள், மருந்து விற்பவர்கள், மருத்துவ சாதனங்களை விற்கும் கடைகள், மருத்துவ பரிசோதனைச் சாலைகள், க்ளினிக், நர்சிங் ஹோம்கள், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகள் வழக்கம் போலச் செயல்படும்.
ரேஷன் கடைகள்
மிக முக்கியமாக ஏழை எளிய மக்கள் பசியை போக்கும் அரசின் ரேஷன் கடைகள் செயல்படுமாம். இது போக உணவு சம்பந்தப்பட்ட கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி மற்றும் பழக் கடைகள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் போன்றவைகளுக்கு விதி இவ்லக்கு அளித்து இருக்கிறார்கள்.
நிதி சேவைகள்
இந்த இக்கட்டான நேரத்தில் கூட வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், ஏடிஎம் இயந்திரங்கள், பத்திரிகைகள், டெலிகாம் சேவைகள், இணைய சேவைகள், கேபிள் சேவைகள், வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் இ காமர்ஸ் நிறுவனங்கள் (உணவு, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள்) போன்றவைகளுக்கும் விதி விலக்களித்து இருக்கிறது அரசு.
பங்குச் சந்தை
மிக முக்கியமாக ரத்த ஆறாக ஓடிக் கொண்டு இருக்கும் பங்குச் சந்தைகள் மற்றும் கடன் பத்திரச் சந்தைகள் வழக்கம் போல வர்த்தகம் ஆகுமாம். இதோடு தனியார் செக்யூரிட்டி சேவைகள் மற்றும் குளிர்சாதன ஸ்டோரேஜ் குடோன்கள் சேவையும் செயல்படுமாம். மற்ற நிறுவனங்கள் வேண்டுமானால் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
போக்குவரத்து மற்றும் தொழில் துறை
அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி ஆலைகள் இயங்கலாம். தொடர்ந்து இயங்கியே ஆக வேண்டிய தொழிற்சாலைகள் மாநில அரசின் அனுமதி உடன் இயங்கலாம். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து வாகனங்கள், தீயணைப்பு, சட்ட ஒழுங்கு மற்றும அவசர சேவை வாகனங்கள் எல்லாம் இயங்கலாமாம்.
ஹோட்டல் துறை
சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள் அல்லது கொரோனா லாக் டவுனால் அதே இடங்களில் தங்க வேண்டிய கட்டாயத்தில் தங்கி இருப்பவர்கள் வசிக்கும் ஹோட்டல்கள், ஹோம் ஸ்டேக்கள், லாட்ஜ்கள், மோட்டல்கள் எல்லாம் செயல்படலாம். அதோடு கொரோனா இருப்பதாகச் சந்தேகித்து குவாரண்டைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு இருக்கும் கட்டடங்கள் செயல்படலாமாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications