பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில் விலைவாசி உயர்வால் மக்கள் மத்தியில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வல்லுனர்களும், முதலீட்டு வங்கியாளர்களும் பாகிஸ்தான் நாட்டின் இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம் என பட்டியல் போட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது. ஆனால் இதில் இருந்து அரசுக்கு முழுமையான வரி வருமானம் கிடைப்பது இல்லை. இதனால் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சனை. இதை சரி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் அந்நாட்டு அரசுக்கு ஐடியா கொடுப்பது மட்டும் அல்லாமல் பல உதாரணங்களை அடுக்கி வருகின்றனர்.

பாகிஸ்தான் 95 சதவீத வர்த்தகம் பணத்தை அடிப்படையாக வைத்து தான் நடக்கிறது, உதாரணமாக ஒருவர் பெட்ரோல் பங்க்-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அரசு டாலர் கொடுத்து இறக்குமதி செய்த பெட்ரோல்-ஐ ஒருவர் பணம் கொடுத்து வாங்குகிறார் என்றால், வகைப்படுத்தப்படாத துறையில் சம்பாதித்த பணத்தை எவ்விதமான வரியும் செலுத்தாமல் பெட்ரோல் வாங்கும் போது அது வகைப்படுத்தப்பட்ட துறையும் பாதிக்கிறது என பாகிஸ்தான் பொருளாதார வல்லுனர் அம்மார் கான் கூறுகிறார்.
இதேபோல் முதலீட்டு வங்கியாளரான நஜாம் அலி டிவிட்டரில் கூறுகையில் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு ஒரு ரியல் எஸ்டேட் சொத்தை வாங்குகிறார் என்றால் அதை 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது பணமாக பெறுகிறார். பத்திர பதிவுக்கான வரியை செலுத்தினாலும் 40 கோடி ரூபாயும் கணக்கில் காட்டப்படாத பணம் தான். இப்படி பாகிஸ்தானில் அதிகப்படியான பணம் கணக்கில் காட்டப்படாமல் உள்ளது.

இதேவேளையில் பாகிஸ்தான் பொருளாதார வல்லுனர் அம்மார் கான், இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் அதிக மதிப்புடைய 5000 ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும். இதன் மூலம் பெருமளவு பணம் வங்கி கட்டமைப்புகள் வருவது மட்டும் அல்லாமல் அரசுக்கு முறையாக வரி வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் Narowal மாவட்ட மேயர் அகமத் இக்பால் டிவிட்டரில், இந்தியாவில் நடந்தது போல் பாகிஸ்தான் நடக்கும் என தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் இருக்கும் பணக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாகவோ அல்லது டாலராகவோ எளிதாக மாற்றிடுவார்கள். இதனால் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் கட்டாயம் தங்களுடைய உண்மையான தொகையை காட்டமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications