மைதானத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மேட்சை முடிப்பதில் கில்லாடியான நம்ம தினேஷ் கார்த்திக் (DK), நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாஸான சிக்ஸர்-ஐ அடித்துள்ளார். மைதானத்தில் கில்லாடி வீரரான கார்த்திக், சமீபத்தில் தான் ஒரு அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானர் இந்த பாசமிகு அப்பா. தன் தேவதை மற்றும் இரண்டு குட்டி இளவரசர்களுக்காகவும், தனது ராணிக்காகவும் கட்டிய வீடு என்றால் சும்மாவா, பார்த்து பார்த்து செதுக்கியுள்ளராம்.
சென்னையில் பூர்வீகமாக கொண்ட கார்த்திக், தற்போது ஒரு பிரம்மாண்ட வீட்டையும் இங்கு கட்டியுள்ளார். வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமே இந்த வீட்டை கட்டவில்லை. தனது மனைவி மற்றும் ஸ்குவாஷ் சாம்பியன் ஆன தீபிகா பல்லிகல் உடன் இணைந்து, ஒரு விளையாட்டு வீரருக்கு தேவையான அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு புகலிடமாக இதை செதுக்கியுள்ளனராம்.

அதிநவீன ஜிம், தியான கூடம், மற்றும் அவர்கள் வென்ற கோப்பைகளை அடுக்கி வைக்க பிரத்யேகமான மெமோரபிலியா பகுதி என இந்த வீடு பார்ப்பதற்கே ஒரு மினி ஸ்டேடியம் போல காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு நடுத்தர வர்க்க கனவிலிருந்து இன்று சூப்பர் ஸ்டாரின் வீட்டு அருகிலேயே குடியேறியுள்ள டி.கே-வின் இந்த வெற்றிப் பயணம், பலருக்கும் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் எனலாம்.
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில், சுமார் 10 கோடி மதிப்பீட்டில் அவர் கட்டியுள்ள ஸ்போர்ட்டிங் பங்களா தான், தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். இந்த வீட்டின் ஆகப்பெரிய ஹைலைட் என்ன தெரியுமா? தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரான தலைவர் ரஜினிகாந்த் தான் டி.கே-வின் பக்கத்து வீட்டுக்காரர்.
இங்கு நிலத்தின் மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகம். சென்னையின் மிக உயர்தரப் பகுதிகளான போயஸ் கார்டன் போன்ற இடங்களில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை 30,000 முதல் 40,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. தென் இந்தியாவிலேயே மிகவும் விரும்பப்படும் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படும் முகவரிகளில் இதுவும் ஒன்று. பல்வேறு ரியல் எஸ்டேட் அறிக்கைகளின் படி கார்த்திக்கின் வீட்டின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, விசாலமானதாகவும், தனித்துவமானதாகவும் அமைந்துள்ளது. பசுமை சூழ்ந்த இந்த வீடு, ஏதோ ஒரு ஆடம்பர சொகுசு வீடு மட்டுமல்ல. இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இன்று அவருடைய நீண்ட பயணத்தின் வெற்றிக்கான அடையாளம். இந்த வீட்டில் உள்ள கலைநயம் மிக்க அம்சங்கள், அவர் சிறந்த விளையாட்டு வீரர் என்பதை தாண்டி, நல்ல ரசனை மிக்க மனிதர் என்பதையும் காட்டுகிறது. அவரின் மொத்த நிகர மதிப்பு சுமார் 95 - 120 கோடி ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications