ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சுகாதார திட்டமாகும். இது முதியோர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சையைப் பெறலாம். இந்த நன்மையைப் பெற தனி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் கார்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தின் நன்மைகள் அனைவருக்கும் கிடைத்துவிடாது. குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் நன்மை கிடைக்கும்.
மேலும் குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு மட்டுமே ஆயுஷ்மான் பாரத் கார்டைப் பயன்படுத்த முடியும். இந்தப் பதிவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கவரேஜ் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) விரைவில் அல்சைமர், டிமென்ஷியா, இதய செயலிழப்பு மற்றும் முதியவர்களை முக்கியமாக பாதிக்கும் பிற நோய்களின் சிகிச்சையை இந்தத் திட்டத்தின் கீழ் அரசு கொண்டு வரலாம் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது, AB-PMJAY முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுமார் 25 சுகாதார பேக்கேஜ்களை வழங்குகிறது.
AB-PMJAY திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் தேசிய சுகாதார ஆணையம், முதியோர் பராமரிப்பு அல்லது முதுமை தொடர்பான நோய்களுக்கு பல பேக்கேஜ்களைச் சேர்ப்பதற்காக செயல்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் இதுபோன்ற பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் உள்ளடக்கிய திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்துவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.
மருத்துவ குழு AB-PMJAY-இன் கீழ் சுகாதாரப் பேக்கேஜ்களை தவறாமல் மதிப்பாய்வு செய்கிறது. மூத்த குடிமக்களையும் சேர்த்து AB-PMJAY திட்டத்தின் விரிவாக்கம் சுமார் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள சுமார் 6 கோடி தனிநபர்களை சென்றடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கவாதம், இதய செயலிழப்பு, புற்றுநோய், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகளால் வயதானவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், இந்த நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்களை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் AB PM-JAY. இது சுமார் 12.3 கோடி ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி நபர்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீட்டை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியை 60:40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன.
ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் எந்தெந்த பேக்கேஜ்கள் உள்ளன?: தேசிய சுகாதார ஆணையத்தின் இணையதளத்தின்படி, மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன் மற்றும் பிந்தைய செலவுகள் போன்ற சிகிச்சை தொடர்பான அனைத்து செலவுகளும் ஒரு பேக்கேஜ்-இல் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார் என்றால் வார்டு கட்டணம், நர்சிங் கட்டணம், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து போன்ற ஆலோசகர்களின் கட்டணம், அனஸ்தீசியா, ரத்தமாற்று மாற்றம் ஆக்ஸிஜன் கட்டணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்களின் கட்டணங்கள், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு மற்றும் பின்னர் செய்யப்படும் செலவுகள், நோயாளியை அதே மருத்துவமனையில் அனுமதிக்கும் முன் ஆலோசனை, சோதனை மற்றும் மருந்துகளுக்கான கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications