தீபாவளி நெருங்கி வருவதால், பல இந்திய நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன. தீபாவளி போனஸ், இனிப்புகள் பருப்புகள், உலர் பழங்கள் என பலவற்றையும் நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்த வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஊழியர்களுக்கு மூன்று பாக்கெட்டுகள் அடங்கிய பாக்ஸை பரிசாக வழங்கியுள்ளது. அதில் முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை என ஒவ்வொன்றும் ஒரு துணி பையில் பொட்டலம் போட்டு வைக்கப்பட்டிருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமில் பணிபுரியும் சாப்ட்வேர் டெவலப்பர் ஒருவர் பரிசை அன்பாக்ஸ் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். "தீபாவளி வாழ்த்துக்கள்" மற்றும் "சுப் தீபாவளி" என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்ட வெள்ளைப் பெட்டியில், ஒரு வெள்ளை பையில் முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை பாக்கெட்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

வெளியான அந்த வீடியோவில் ஒரு பெண் தனக்கு கிடைத்த கிப்ட் பாக்ஸை திறக்க முயற்சிக்கிறார். அந்த கிப்ட் பாக்ஸ் வெள்ளை நிறத்தில் உள்ளது. உள்ளே ஒரு கார்டும் இருக்கிறது. மேலும் ஒரு சுருக்கு பை போன்ற ஒன்றில் 3 தனித்தனி பாக்கெட்களில் முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டமான அந்த பாக்ஸ்க்குள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மனைவி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் குடும்பத்தின் நான்கு இளம் பேரக்குழந்தைகளின் குறிப்புடன் கூடிய கார்டும் இருந்தது.
1.6 மில்லியனுக்கும் அதிகமான வீயூஸ்களைப் பெற்ற இந்த வீடியோவுக்கு ஜியோ நிறுவனத்திடம் இருந்து வழங்கப்பட்ட தீபாவளி பரிசு என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ 500-க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களைப் பெற்றுள்ளது. பலரும் தங்கள் நிறுவனத்திலிருந்து கிடைத்த தீபாவளி பரிசுகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு பயனர் தனது நிறுவனத்தில் இருந்து ஏர் ஃப்ரைங் மெஷின் கிடைத்ததாக கூறியிருந்தார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் இந்த முறை கேஷ் போனஸ் கிடைத்ததாக கூறியிருந்தார். கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டிலும் ரிலையன்ஸ் தனது ஊழியர்களுக்கு இதே போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் பாதாம் பருப்பு மற்றும் உலர் பழங்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்தது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்களின் போதும் ரிலையன்ஸ் ஊழியர்கள் கிப்ட் பாக்ஸ் பெற்றனர். பல ரிலையன்ஸ் ஊழியர்களும் சமூக ஊடகங்களில் இவர்களுடைய திருமணத்திற்கு கிடைத்த கிப்ட் பாக்ஸின் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications