இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனாலும் எலக்ட்ரிக் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை நடக்கவில்லை என்பதால் அடுத்தக்கட்ட உற்பத்தி மேம்படுத்தும் முன்பு மக்களை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க எது தடுக்கிறது என்பதற்கான காரணத்தை அரிய விரும்பிய OLA நிறுவனத்தின் CEO பாவிஷ் அகர்வால், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளார்.
எலக்ட்ரிக் வாகனம் வாங்க எது தடையாக உள்ளது!
OLA நிறுவனத்தின் CEO பாவிஷ் அகர்வால், அவரின் ட்விட்டர் பக்கத்தில் எலக்ட்ரிக் வாகனம் வாங்க எது தடையாக உள்ளது என்ற கேள்வியுடன் 4 ஆஃப்சனயும் கொடுத்துள்ளார்.
1. அதிக விலையா?
2. பேட்டரி 5 வருடம் வருமா?
3. போதுமான சார்ஜிங் பாயிண்டுகள் இல்லாததா?
4. போதுமான ரேஞ்சஸ் இல்லாததா?
போன்ற ஆஃப்சன்களைக் கொடுத்துள்ளார்.
மக்கள் கருத்து!
அதற்கு பதிலளித்த மக்கள் பலரும் போதுமான சார்ஜிங் பாயிண்டுகள் இல்லாதது தான் எலக்ட்ரிக் வாகனம் வாங்க மிகப்பெரிய தடையாக இருப்பதாக பதிலளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விலை காரணமாகவும் வாங்கத் தயக்குவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பயனரின் கருத்து!
பாவிஷ் அகர்வாலின் ட்விட்டிற்கும் பயனர் ஒருவர் பல கருத்துக்களை விளக்கமாக பகிர்ந்துள்ளார். 1,2,3 அடுக்கு பெருநகரங்களில் உள்ள மக்கள் சார்ஜிங் நிலையங்கள் காரணமாகவே எலக்ட்ரிக் வாகனம் வாங்கத் தயங்குவதாகவும், பெரும்பாலான Hyper charging பாயிண்டுகள் பெட்ரோல் பங்க்-களில் உள்ளதால் மக்களுக்கு அதிக சிரமமாக இருக்கும் எனவும், தனிப்பட்ட சார்ஜிங் யூனிட்டுகள் தேவை எனவும் கூறியுள்ளார்.
மற்றொரு நபர் ஒருபடி மேலே சென்று 5 ஆவது ஆஃப்சனாக "சேவை பற்றியா"? "The 5th barrier is about service" பதிவிட்டுள்ளார்.
உங்க பதில் என்ன..? கமெண்ட் பண்ணுங்க..!
தொழில்துறை நிறுவனர்கள் கருத்து!
பிசினஸ் டுடேக்கு பேட்டி அளித்துள்ள EY India-வின் பங்குதாரர் மற்றும் தலைவரான சோமேஸ் குமார் இதுகுறித்து கூறுகையில் இந்தியாவில் 20 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சாலையில் பயன்பாட்டில் இருப்பதாகவும், 50 சதவீத வாகனங்கள் 2030 ஆம் ஆண்டிற்கும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
net-zero இலக்கு
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய பட்ஜெட் 2023-24 இல் வருகின்ற 2070 ஆண்டுக்குள் எனர்ஜி மற்றும் net-zero இலக்குகளை அடைய மூலதன முதலீடுகளுக்கு சுமார் ரூ.35,000 கோடி செலவாகும் எனவும், 4,000 MWH திறன் கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்படும் எனவும் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
வரி விலக்கு
மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவைப்படும் முக்கிய கூறுகளில் ஒன்றான பேட்டரி, பட்ஜெட்டில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்திற்கு தேவையான மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications