மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவன மருந்தால் என்ன பிரச்சனை.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளே காரணம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இருமல் மருந்து காரணமாக சிறுநீரக காயம் காரணமாக குழந்தைகள் இறந்தது தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் பேஸ்புக்..! சத்தமில்லாமல் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் பேஸ்புக்..!

உலக சுகாதார நிறுவனம் விசாரணை

உலக சுகாதார நிறுவனம் விசாரணை

இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனத்திடம், உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இது தொடர்பான சில மருந்துகளின் விற்பனையை நிறுத்தும்படி கூறியுள்ளது.

இந்த 4 மருந்துகளும் காம்பியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வேறு சில நாடுகளும் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகள்

தடை செய்யப்பட்ட மருந்துகள்

 

ப்ரோமெதாசின் ஓரல்சொல்யூசன்ஸ் (Promethazine Oral Solution)

கோஃபெக்ஸ்மாலின் பேபி காப் சிரப் ( Kofexmalin Baby Cough Syrup )

மேக்ஆப் பேபி காப் சிரப் ( Makoff Baby Cough Syrup)

மாக்ரிப் என் கோல்டு சிரப் ( Magrip N Cold Syrup)

ஏற்றுக் கொள்ள முடியாத பொருட்கள்

ஏற்றுக் கொள்ள முடியாத பொருட்கள்

குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 மருந்துகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகளில் மனித உடலுக்கு பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இருப்பதாகவும், இது ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த மருந்துகளில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ,உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னணி மருந்து ஏற்றுமதியாளர்

முன்னணி மருந்து ஏற்றுமதியாளர்

உலகின் முன்னணி மருந்து ஏற்றுமதியாளராக இருக்கும் இந்தியாவில் இருந்து, பல வகையான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் இந்த சர்ச்சையால், மருந்து ஏற்றுமதியில் தாக்கம் ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் இந்திய சுகாதார துறையும் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம்

மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம்

தற்போது சிக்கலில் இருக்கும் மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனமாகும். இதன் மற்றொரு ஆலை ஹிமாச்சல பிரதேசத்திலும் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து ஏற்றுமதி செய்து வரும் நிலையில், இது ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முக்கியமாக ஏற்றுமதி செய்து வருகின்றது.

சர்வதேச தர சான்றுகள்

சர்வதேச தர சான்றுகள்

இது ISO 9001: 2008 என சான்றினையும் பெற்றுள்ளது. இது தவிர WHO - GMP சான்றினையும் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் கோயல் ஆகும். இதன் புரோமோட்டர் நரேஷ் குமார் கோயல் ஆகும். இந்த நிறுவனத்தில் 50 - 100 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 கோடி ரூபாய்க்கு மிகாமல் வருவாயினை ஈட்டி வருகின்றது.

வருவாய் நிலவரம்

வருவாய் நிலவரம்

ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 கோடி ரூபாய்க்கு மிகாமல் வருவாயினை ஈட்டி வருகின்றது. கடந்த 2021ம் நிதியாண்டில் இதன் நிகரலாபம் 5.82 கோடி ரூபாயாகும். இதன் வருவாய் விகிதம் 38.95 கோடி ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What's wrong with Maiden Pharmaceuticals' drug? What does the WHO say?

WHO warned that 66 children died in the African country of Gambia because of 4 cough medicines made in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X