தேர்தல் முடிவுகளை இந்திய பங்குச்சந்தையை புரட்டிப்போட்டு இருந்தாலும் ஜூன் 5 ஆம் தேதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2303.19 புள்ளிகள் உயர்ந்துள்ளது, நேற்றைய சரிவில் சுமார் 50 சதவீதம் இன்று மீண்டுள்ளது மும்பை பங்குச்சந்தை.
பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை என்றாலும், புதிய முதலீட்டாளர்களுக்கு அவை மிரட்டலாக இருக்கலாம். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பங்குச்சந்தையில் அறிமுகமாகி, SIP முறையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ள இளைய தலைமுறைக்கு தேர்தல் காலங்களில் ஏற்படும் சந்தை வீழ்ச்சிகள் புதிய அனுபவமாக இருக்கும்.

சமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சந்தையில் ஏற்பட்ட சரிவு அவர்களைக் கலங்கவைத்துள்ளது. ஆனால், நிபுணர்கள் இத்தகைய சந்தை சரிவுகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாகக் கருதுகின்றனர்.
மோடிலால் ஓஸ்வால் குழுமத்தின் ராமதேவ் அகர்வால் அவர்கள் SIP முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். "தற்போதைய சந்தை சரிவு உங்கள் SIP தொகையை அதிகரிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும்" என்று அவர் கூறியுள்ளார்.
பொதுவாக, SIP முதலீடுகளின் அடிப்படை நெறிமுறை, Cost Averaging ஆகும். அதாவது, நீண்ட காலத்திற்கு சீரான தவணைகளில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை உச்சத்தில் வாங்கும் அபாயத்தைக் குறைத்து, சராசரி விலையில் மியூச்சுவல் பண்ட் யூனிட்களை (Units) பெற முடியும்.
ஆனால், சந்தை ஏற்றம் உள்ள காலங்களில் மட்டுமே SIP களைத் தொடர்ந்து வந்தால், சந்தை உயர்ந்துகொண்டே இருக்கும் போது அதிக விலையில் யூனிட்களை வாங்க வேண்டியிருக்கும். இதனால், சராசரி விலை (Average Price) குறைவதை அடைய முடியாமல் போகலாம்.
தற்போது சந்தை சரிவில் இருப்பதால், கூடுதல் SIP தொகையை முதலீடு செய்வதன் மூலம் குறைந்த விலையில் யூனிட்களை வாங்க முடியும். இது நீண்ட காலத்திற்கு சிறந்த லாபத்தை அடைய உதவும்.
உதாரணமாக, 1000 ரூபாய் என்ற மாதாந்திர SIP தொகையை இரட்டிப்பாகக் கூட்டி 2000 ரூபாய் ஆக மாற்றுவதன் மூலம், குறைந்த விலையில் அதிக யூனிட்களைப் பெற முடியும். இதன் பலன், சந்தை மீண்டும் ஏறும்போது அதிக லாபம் கிடைக்கும்.
எனவே, SIP முதலீட்டாளர்கள் சந்தை சரிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மாறாக, இது தங்களது சராசரி விலையைக் குறைத்து, நீண்ட காலத்திற்கு அதிக லாபம் ஈட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாகக் கருத வேண்டும். தற்போதுள்ள SIP தொகையை அதிகரிப்பது அல்லது புதிய SIPகளைத் தொடங்குவது போன்ற முதலீட்டு பழக்கத்தை பின்பற்றலாம்.
பங்குச்சந்தை என்பது சுழற்சித்தன்மை கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சந்தை எப்போதும் ஏற்றத்தில் இருக்காது, இறக்கமும் இருக்கும். ஆனால், நீண்ட கால SIP முதலீட்டின் மூலம், இந்த ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து கூடுதல் லாபம் பெறும் வாய்ப்பை கொடுக்கும்.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications