சென்னை: நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் என்றால் நிச்சயமாக உங்களுடைய போனில் இந்த ஒரு விஷயத்தை கவனித்து இருப்பீர்கள் . உங்களுடைய ஐபோன் டிஸ்ப்ளேயில் சிறிய பச்சை நிறத்திலான அல்லது ஆரஞ்சு நிறத்திலான புள்ளி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எதற்காக இந்த புள்ளி இருக்கிறது என்பதற்கான விடையை தான் நான் இந்த கட்டுரையை தெரிந்து கொள்ள போகிறோம்.
சுருக்கமாக சொல்லப்போனால் உங்களுடைய போனில் மைக் மற்றும் கேமரா ஆகியவை தற்போது செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக தான் இந்த சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற புள்ளிகள் நமது டிஸ்ப்ளேவில் காட்டுகின்றன.

ஒருவேளை உங்களுடைய ஐபோனில் மைக் மற்றும் ஆடியோ ரெக்கார்டர் போன்ற மைக்கை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஏதேனும் செயலி பயன்பாட்டில் இருக்கிறது என்றால் இதில் ஆரஞ்சு நிற புள்ளி மட்டும் தெரியும் . கேமரா செயல்பாட்டில் இருக்கிறது என்றால் பச்சை நிற புள்ளி தெரியும்.
ஒருவேளை கேமரா மற்றும் மைக் ஆகிய இரண்டுமே பயன்படுத்தும் செயலி தற்போது இயக்கத்தில் இருக்கிறது எனில் உங்கள் போனில் பச்சை நிற புள்ளி மட்டுமே தெரியும். ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐஓஎஸ் 14 இல் இந்த நவீன அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
இது தற்போது ஐபோன்கள் மட்டுமில்லாமல் ஐபேட்கள் மற்றும் மேக் கணினிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது iPadOS மற்றும் macOSஇன் சமீபத்திய பதிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு இது தெரியும்.
இந்த ஆரஞ்சு மற்றும் பச்சை நிற இண்டிகேட்டர்களை நாம் ஆஃப் செய்ய முடியாது. ஆனால் எந்தெந்த செயலிகளுக்கெல்லாம் மைக் மற்றும் கேமராவை பயன்படுத்துவதற்கான அனுமதியை தந்திருக்கிறீர்கள் என்பதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு செட்டிங்ஸில் சென்று பிரைவசி மற்றும் செக்யூரிட்டி மெனு ஆகியவற்றில் (Settings > Privacy and Security menu) சென்று கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள முடியும்.
இந்த இண்டிகேட்டர்களின் முக்கியமான நோக்கம் உங்களுடைய போனில் உங்களுக்கு தெரியாமலேயே ஏதேனும் செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீங்கல் தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய ரகசிய தகவல்களையும் உங்களுடைய ஆடியோ உள்ளிட்டவற்றையும் ரெக்கார்ட் செய்கிறதா என்பதை இந்த ஒரு இன்டிகேட்டர் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
போனில் ஆரஞ்சு நிற புள்ளி தெரியும் போது நீங்கள் மைக் ரெக்காடரை ஆன் செய்துள்ளீர்களா என்பதை கவனியுங்கள், அதே போல பச்சை நிற புள்ளி தெரிந்தால் கேமரா உள்ளிட்டவை செயல்படுகிறதா என பாருங்கள் அவ்வாறு இல்லை என்றால் ஏதேனும் ஒரு செயலி உங்களுக்கு தெரியாமலே உங்களின் தகவல்களை பதிவு செய்யலாம், உடனே அதனை கண்டு சரி செய்வது உங்களுக்கும் உங்களின் தகவல்களுக்கும் பாதுகாப்பானது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications