ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!

நாம் வங்கியில் கணக்கு தொடங்கும் போது நமக்கு ஏடிஎம் கார்டு வழங்குவார்கள் என்பது தெரிந்ததே.

இந்த ஏடிஎம் கார்டுகள் மூலம் பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக கூறப்படுவதால் இது குறித்து விழிப்புணர்வை வங்கி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக ஏடிஎம் பின் நம்பரை அவ்வப்போது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

ஏடிஎம் கார்டு

ஏடிஎம் கார்டு

வங்கி கணக்கு தொடங்கும் போது நமக்கு ஏடிஎம் கார்டு மற்றும் அதற்கான பின் நம்பர் வழங்கப்படும். இந்த பின் நம்பரை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பின் நம்பர் மறந்து விட்டாலும் ஏடிஎம் இயந்திரம் உள்பட பல்வேறு வழிகளில் நாம் பின் நம்பரை மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் நம்பர்

பின் நம்பர்

பின் நம்பரை அவ்வப்போது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறைந்தது 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை பின் நம்பரை மாற்றி கொள்ள வேண்டுமென்றும் அவ்வாறு பின் நம்பரை மாற்றிக் கொள்வதால் ஏடிஎம் மோசடிகளை தவிர்க்கலாம் என்றும் வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரம்

ஏடிஎம் இயந்திரம்

ஏடிஎம் பின் நம்பரை மாற்றுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பின் நம்பரை மாற்றி கொள்ளலாம். அதே போல் வங்கிகளுக்கு சென்றும் பின் நம்பரை மாற்றலாம். மேலும் இன்டர்நெட் பேங்கிங், வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் எஸ்எம்எஸ் பேங்கிங் மூலமும் பின் நம்பரை மாற்றி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் நம்பரை மாற்றுவது எப்படி?

பின் நம்பரை மாற்றுவது எப்படி?

இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பின் நம்பரை மாற்றுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குச் செஎன்று ஏடிஎம் எந்திரத்தில் கார்டை சொருகி முதலில் விருப்பமான மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். பின் திரையில் இருக்கும் பின் நம்பர் உருவாக்கும் வசதியை கிளிக் செய்ய வேண்டும். வங்கியில் அளித்துள்ள மொபைல் எண்ணை பதிவு செய்தால் ஓடிபி எண் மொபைலுக்கு வரும். அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்தால் புதிய பின் நம்பரை உருவாக்கி கொள்ளலாம்.

10 முக்கிய அம்சங்கள்

10 முக்கிய அம்சங்கள்

ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துவோர் கண்டிப்பாக கீழ்க்கண்ட 10 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவை பின்வருவன:

1) ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் போது கீபேடை மறைக்க உங்கள் கையை பயன்படுத்தவும்.

2) உங்கள் பின்கார்டு விவரங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம்.

3) உங்கள் கார்டின் பின்பக்கத்தில் பின் நம்பரை எழுத வேண்டாம்.

4) உங்கள் கார்டு விவரங்கள் அல்லது பின் நம்பரை கேட்கும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.

5) உங்கள் பிறந்தநாள், தொலைபேசி அல்லது கணக்கு எண்ணில் உள்ள நம்பரை உங்கள் பின் நம்பராக பயன்படுத்த வேண்டாம்.

6) உங்கள் பரிவர்த்தனை ரசீதை அப்புறப்படுத்தவும் அல்லது பாதுகாப்பாக வைக்கவும்.

7)உங்கள் பரிவர்த்தனையைத் தொடங்கும் முன் ஸ்பை கேமராக்கள் இருக்கின்றதா? என்பதை கவனிக்க வேண்டும்.

8) ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் போது கீபேட் கையாளுதல், வெப்ப மேப்பிங் ஆகியவற்றில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

9) உங்கள் தோளுக்கு பின்னால் உங்கள் பின் நம்பரை யாரோ திருடுவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

10) பரிவர்த்தனை விழிப்பூட்டல்களுக்கு பதிவு செய்வதை உறுதி செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+