இன்றைய உலகில் நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். எந்த பொருட்கள் வாங்கினாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை.. அதாவது MRP விலையைப் பார்த்து தான் வாங்குகின்றனர். சட்டப்படி எந்த ஒரு கடைக்காரரும் இந்த MRP விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்கக் கூடாது. ஒரு MRP விலையை விட அதிகமாக வசூலித்தால் அது குறித்து நீங்கள் புகார் அளிக்கலாம்.
MRP என்றால் என்ன?: MRP என்பது அதிகபட்ச சில்லறை விலையைக் குறிக்கிறது, இது இந்தியாவில் ஒரு பொருளை விற்கக்கூடிய அதிகபட்ச விலையாகும். 2006-ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டது, இது நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.

இந்தியாவில் MRP விலையை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது. இருப்பினும் பல நுகர்வோர், இது குறித்து தெரியாமல் இன்னமும் சில கடைக்காரர்களிடமிருந்து சில சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர்.நுகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு நுகர்வோர் உபகாரங்கள் துணை உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் இந்தியாவில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நுகர்வோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாகும்.
புகாரை பதிவு செய்யவும்: ஒரு கடைக்காரர் MRP-ஐ விட அதிகமாக வசூலித்தால், நீங்கள் புகார் அளிக்கலாம். தேசிய நுகர்வோர் மன்றத்தின் ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைக்கலாம். உங்கள் புகாரை நேரடியாகப் பதிவு செய்ய 1800-11-4000-க்கு டயல் செய்யலாம்.
ஆன்லைனில் புகாரை பதிவு செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் ConsumerHelpline.gov.in என்ற நுகர்வோர் இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உங்கள் மெயில் முகவரியை பயன்படுத்தி கணக்கை தொடங்கவும்.
ஸ்டெப் 3: நீங்கள் கணக்கு தொடங்க பயன்படுத்திய மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 4: எந்த பொருள் வாங்கி இருக்கிறீர்களோ அந்த பொருளின் விவரங்கள் கடைக்காரரின் பெயர், முகவரி போன்ற விவரங்களையும் நிரப்பவும்.
ஸ்டெப் 5: MRP லேபிளின் ரசீதுகள் அல்லது புகைப்படங்கள் போன்ற உங்கள் புகாரை தெரிவிக்கும் ஆவணங்களை அப்லோடு செய்யவும்.
உங்கள் புகார் செல்லுபடியாகும் பட்சத்தில், அதிகாரிகள் கடைக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
ஒரு கடைக்காரர் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் பட்சத்தில் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி நுகர்வோர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகைக்கு இழப்பீடு பெறவும் உரிமை உண்டு. எனவே எந்த பொருட்களை வாங்கினாலும் நுகர்வோர் வாங்குவதற்கு முன்பு ஒரு முறை MRP விலையை சரிபார்க்க வேண்டும். வாடிக்கையாளர் தொடர்ந்து புகார் அளித்தால் முதல் முறை வரும் புகாருக்கு 25,000 ரூபாயும், இரண்டாவது முறை வரும் புகாருக்கு ரூ.50,000 ரூபாயும், மூன்றாவது முறை வரும் புகாருக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications