சென்னை: நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக உள்ளன. உங்களின் அனைத்து பரிவர்த்தனைக்கும் தேவைப்படும், இது போன்ற அரசாங்க ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆதார் கார்டு: ஆதார் முக்கியமான முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கார்டு அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. எல்பிஜி மானியம், அரசாங்க உதவித்தொகை, EPF கணக்குகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் நம்பர் கட்டாயமாகும். ஒருவர் இறந்து இறப்புச் சான்றிதழைப் பெற்றால் ஆதார் தானாகவே செயலிழந்து விடும் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் அவ்வாறு இல்லை. ஆதாரை இறப்பு தேதியை வைத்து புதுப்பிக்க முடியாது. இதுபோன்ற இறந்தவர்களின் ஆதார் அட்டைகளை பயோமெட்ரிக் லாக் செய்வதன் மூலம் பாதுகாக்கலாம். இதனால் இறந்தவரின் ஆதாரத்தை தவறாக மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்வதால் இறந்தவரின் ஆதாரை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.
பான் கார்டு: பேங்க் அக்கவுண்ட், டிமேட் அக்கவுண்ட், ITR தாக்கல் செய்வது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில் வருமானவரித்துறையினரிடம் இருந்து இறந்தவருக்கு ஏதேனும் ரீஃபண்ட் வர இருந்தால் நீங்கள் அவருடைய வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது போன்ற எல்லா விஷயங்களும் முடிவடைந்த பின்னர் பான் கார்டை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கலாம்.
இறந்தவரின் பான் கார்டு ஒப்படைக்க என்ன செய்ய வேண்டும்?: இறந்தவரின் வாரிசு அல்லது குடும்ப உறுப்பினர் மதிப்பீட்டு அதிகாரிக்கு (AO) ஒரு விண்ணப்பத்தை எழுத வேண்டும். அதில் என்ன காரணத்தினால் பான் கார்டு வைத்திருப்பவர் இறந்தார், அவருடைய பெயர், பான் விவரங்கள், பிறந்த தேதி போன்றவற்றை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் ஜெராக்ஸ் காப்பியை கடிதத்தில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் பான் விவரங்களை ஒப்படைப்பது என்பது கட்டாயம் இல்லை. இருந்தாலும் தேவைப்பட்டால் நீங்கள் அதனை ஒப்படைக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை: வாக்காளர் அட்டையை பொருத்தவரை, வாக்காளர் விதிகள் 1960-இன் கீழ் இறந்தவருடைய வாக்காளர் அட்டையை ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இறந்தவரின் சட்டபூர்வ வாரிசு உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று படிவம் எண் 7 -ஐ பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதளை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட்: இறந்தவரின் பாஸ்போர்ட் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தானாகவே காலாவதியாகிவிடும்.
இதுபோன்ற இறந்தவர்களின் ஆவணங்களை சட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் படாவிட்டால் எந்த அபராதமும் இல்லை. இருப்பினும், இது போன்ற ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது அல்லது டி-ஆக்டிவேட் செய்வது, ஆன்லைனில் மோசடிகள் நடப்பதைத் தவிர்க்க உதவும். ஒரு வேலை, உங்களால் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியவில்லை என்றாலும், நீங்களே இறந்தவர்களின் ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்கலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications