பட்ஜெட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..! #budget2022

நாட்டில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கப்படுமா? பொருளாதாரம் என்னவாகும்? என்ற அச்சம் இருந்து வருகின்றது.

கொரோனாவோ அடுத்தடுத்தடுத்த லெவலுக்கு உருமாற்றம் கண்டு பரவி வருகின்றது. இதற்கிடையில் இன்னும் சில தினங்களில் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? என்பதை பற்றித் தான் இதில் பார்க்க இருக்கிறோம்.

சுகாதார துறைக்கு முதலீடு

சுகாதார துறைக்கு முதலீடு

இன்று நாம் பார்க்க இருக்கும் முதல் விஷயம் கொரோனா. கொரோனா பெருந்தொற்று காரணமாக சுகாதாரத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதார உள்கட்டமைப்பு துறைக்கு அதிக முதலீடுகளை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்சூரன்ஸ் துறைக்கு அறிவிப்பு

இன்சூரன்ஸ் துறைக்கு அறிவிப்பு

ஓமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்றினை எதிர்த்து போராட மக்கள் பெரிதும் நம்பியிருப்பது இன்சூரன்ஸினை தான். ஆக ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கான வரி சலுகையை அதிகரிக்க வேண்டும். இதில் இன்னும் பயனாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளதார்களுக்கு சலுகை

சம்பளதார்களுக்கு சலுகை

சம்பளதாரர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விதமாக வருமான வரியில் பெரும் சலுகை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர நுகர்வானது பெரும் அளவு குறைந்துள்ளது. இதோடு வேலை விகிதமும் குறைந்துள்ளது. தனியார் முதலீடுகளும் குறைந்துள்ளது. இதனை ஊக்கப்படுத்த பற்பல அறிவிப்புகள் வரலாம்.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

இந்தியாவில் பெருந்தொற்றுக்கு மத்தியில் பல லட்சம் மக்களின் வாழ்வதரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். எனினும் அதே சமயம் சில பெரும் நிறுவனங்கள் எதிர்பாராத அளவு பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. ஆக்ஸ்பாம் அறிக்கையின் படி நாட்டில் 84% குடும்பங்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர். அதே சமயம் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 102ல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது.

 சாமனியர்களின் எதிர்பார்ப்பு

சாமனியர்களின் எதிர்பார்ப்பு

சொகுசு கார்களின் விற்பனையானது கணிசமான அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. பணக்காரர்களின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்தன. அதேசமயம் தனி நபர்களின் வருமானம் குறைந்துள்ளது. வேலை இழப்புகள் அதிகரித்துள்ளது. சம்பள விகிதம் சரிவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சாமனிய மக்கள் எதிர்கொண்டுள்ளனர். ஆக சாமனியர்களின் இந்த பிரச்சனையை சமாளிக்க அரசு சரியான அறிவிப்புகளை கொடுக்க வேண்டும் என்பதே சாமனிய மக்களின் எதிர்பார்ப்பே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+