வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வாவது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளில் வாக்கு சதவீத அடிப்படையில் பார்க்கும்போது டொனால்ட் டிரம்ப் 51.2% வாக்குகளை பெற்றிருக்கிறார்.
மொத்தம் 270 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார் அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் தற்போது 267 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றிருக்கிறார். அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி ஏற்பது தற்போது உறுதியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய ஐடி நிறுவனங்களிலும், பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா செல்ல பயன்படுத்தும் ஹெச்1 பி விசா நடைமுறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பி பணி புரிய வைக்கின்றன. அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என தொடர்ந்து கூறி வருபவர் டொனால்ட் டிரம்ப். வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்றனர் என டிரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில் அவர் அதிபராவது ஹெச்1பி விசாவுக்காக காத்திருப்போருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அறிவியல், பொறியியல் துறைகளில் இயங்கும் நிறுவனங்கள் ஹெச்1பி விசா வாயிலாகவே வெளிநாட்டு பணியாளர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து வேலையில் அமர்த்துகின்றன.
இந்தியாவை சேர்ந்த டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களும் கூட ஹெச்1பி விசா அடிப்படையில் தான் பணியாளர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் ஆன் சைட் பணிக்காக அனுப்புகின்றன.
ஆனால் டொனால்ட் டிரம்ப்பை பொறுத்தவரை ஹெச்1பி விசா நடைமுறைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக இருக்கிறார். அவர் தான் ஆட்சிக்கு வரும்போது ஹெச்1பி விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பார் என சொல்லப்படுகிறது, ஹெச்1பி விசா பெறுவதற்கான தகுதி வரம்புகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்காவில் சென்று ஐடி வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் பாதிக்கப்பட கூடும். கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்த போதே ஹெச்1பி விசா வைத்திருப்போருக்கான ஊதிய வரம்பை உயர்த்த முயற்சி செய்தார்.
இவ்வாறு ஊதிய வரம்பை அதிகப்படுத்தினால், நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை தவிர்த்து அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே டொனால்ட் டிரம்பின் வருகை ஹெச்1பி விசா நடைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து எந்த ஒரு அதிபரும் ஹெச்1பி விசா திட்டத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வரவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். டொனால்ட் டிரம்ப் முன்னதாக அதிபர் பதவி வகித்த போது கூட பெரிய அளவிலான மாற்றங்களை இதில் கொண்டு வர முயற்சிகள் எடுத்தாலும், அதை நடைமுறை செய்ய முடியவில்லை.
ஆனாலும் தற்போது அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு சரிவடைந்து இருப்பதாகவும் வெளிநாட்டவர்க்கான வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுவதால் டொனால்ட் டிரம்ப் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications