டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் உயர்த்தப்படுகிறது.
அகவிலைப்படி என்றால் என்ன: 10 ஆண்டு காலத்தில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை ஈடு செய்வதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை என மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 12 மாத காலத்திற்கான பணவீக்க தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படி என்பது உயர்த்தப்படுகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை உயர்வு: இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இந்த ஆறு மாத காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு விடும். ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பலன் பெற இருக்கின்றனர்.
எவ்வளவு உயரும்?:தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய அடிப்படை சம்பளத்தில் இருந்து 55 சதவீதம் தொகை அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தந்தது. இதன் மூலம் அவர்களுக்கான அகவிலைப்படி என்பது 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்தது.

அதிகமாக இருக்கும் என தகவல்: இந்த நிலையில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கான அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது. அண்மையில் தான் ஜூன் மாதத்திற்கான அனைத்து இந்திய நுகர்வு விலை குறியீடு வெளியிடப்பட்டது. அதன் 145 என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 12 மாதங்களுக்கான சராசரி நுகர்வு விலை குறியீடு 143.6 ஆக கொள்ளப்படுகிறது . இதன் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
எப்படி கணக்கீடு: 7ஆவது சம்பள கமிஷன் நடைமுறைப்படி அகவிலைப்படி என்பது DA (%) = [(CPI-IW average × 2.88) - 261.42] ÷ 261.42 × 100 என்ற ஃபார்முலாவில் கணக்கிடப்படுகிறது. DA (%) = [(143.6 × 2.88) - 261.42] ÷ 261.42 × 100 = 58.2% என விடை கிடைக்கிறது., அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 58%ஆக மாற உள்ளது. செப்டம்பரில் இருந்து அக்டோபர் மாதத்திற்குள் இந்த அறிவிப்பு வெளியாகிவிடும். ஜூலை மாத சம்பளத்தில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு விடும்.
ஏற்கனவே 8ஆவது சம்பள கமிஷன் பணிகள் தாமதமாகி வரும் நிலையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு சற்று நிம்மதி தரும்.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications