அடுத்த 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும்?

சென்னை: தற்போதைய சூழலில் ஓய்வு பெறுவதற்கு எவ்வளவு தொகை தேவை என யாரிடமாவது கேட்டால் குறைந்தது 1 கோடியாவது தேவை என கூறுவார்கள். இந்த கால சூழலில் 1 கோடி ரூபாய் நிதி தொகுப்புடன் ஓய்வு பெறுவது நமக்கு பொருத்தமானதாக தோன்றும். ஆனால் அடுத்த 10 , 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இருக்கும் 1 கோடி ரூபாயின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டால் நாம் இந்த முடிவினை மாற்றிக் கொள்வோம்.

பணம் வீக்கத்தின் அடிப்படையில் தான் ஓய்வு காலத்திற்கு அல்லது எதிர்கால தேவைக்கான முதலீட்டினை அல்லது நிதி தொகுப்பினை திட்டமிட வேண்டும் என்கின்றனர் நிதித்துறை சார்ந்த நிபுணர்கள். ஏனெனில் பணவீக்கம் என்பது பொருளை வாங்கக்கூடிய பணத்தின் மதிப்பு குறைவது ஆகும்.

அடுத்த 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும்?

இன்றைய தினத்திற்கு 100 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் பணவீக்கம் ஓர் ஆண்டுக்கு 6 சதவீதமாக இருக்கிறது எனில் அடுத்த ஆண்டில் அதே பொருளை 106 ரூபாய்க்கு வாங்க வேண்டும்.

அதாவது பொருளின் மதிப்பு உயர்ந்து விடுகிறது அதை வாங்கக்கூடிய பணத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது. அந்த வகையில் இந்த கட்டுரையில் நாம் தற்போது ஒரு கோடி ரூபாயின் மதிப்பு அடுத்த 10 ,20, 30 ஆண்டுகளில் என்னவாக இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நமது வங்கிக் கணக்கில் 1 கோடி ரூபாயை வைத்திருப்பது எதிர்கால நிதி தேவைகளுக்கு போதுமானதாக தோன்றலாம். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

உதாரணமாக தற்போது 10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கார் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இதை விட பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை ஆகும். அந்த வகையில் தற்போது உள்ள 1 கோடி ரூபாயின் மதிப்பு அடுத்த 10 ஆண்டு காலத்தில் 6 சதவீத பணவீக்க விகிதம் என்ற அளவில் கணக்கீடு செய்தால் 55.84 லட்சமாக இருக்கும்.

அதே போல 20 ஆண்டுகளில் தற்போதுள்ள 1 கோடி ரூபாய் மதிப்பு வெறும் 31.18 லட்சமாக குறைந்து விடும். 30 ஆண்டுகள் என கணக்கீடு செய்து பார்க்கும் போது தற்போதுள்ள 1 கோடி ரூபாய் மதிப்பு அப்போது 17.41 லட்சம் ஆக இருக்கும் .

எனவே ஒரு முதலீட்டினை செய்யும் போது ஆண்டுக்கு 6 சதவீதத்திற்கு மேல் லாபம் தரக்கூடிய முதலீடாக இருந்தால் உங்களால் பணவீக்கத்தை விட அதிகமான லாபத்தை பெற முடியும் எனும்போது அது சிறந்த முதலீடாக இருக்கும். எனவே பணவீக்கத்தை கருத்தில் கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பதே சிறந்தது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+