வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி என்ன நடக்கும்?

சென்னை: 2023-24 நிதியாண்டிற்கான (Assessment Year 2024-25) வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய ஜூலை 31, 2024 வரை உங்களுக்கு அவகாசம் உள்ளது. இந்தக் காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், டிசம்பர் 31, 2024 வரை தாமதமாகத் தாக்கல் செய்யலாம். வருமான வரி ரிட்டர்ன் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஒவ்வொரு தனி நபர் மற்றும் வணிகங்களில் ஈடுபடுவோர் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதி ஆகும்.

எனவே, வருமான வரித்துறையின் காலக்கெடுவுக்குள் ITR ஐ தாக்கல் செய்வது சட்டப்பூர்வ கடமை மட்டும் அல்லாமல் மிகவும் பொறுப்பான நடைமுறையும் கூட. வருமான வரி செலுத்துவோருக்கு இந்த விஷயம் தெரிந்து இருக்கும். சிலர் தங்கள் வாழ்க்கையில் பிஸி ஆகும்போது சில சமயங்களில் இந்த காலக்கெடு மிஸ் ஆகலாம். அவ்வாறு ஐடிஆர் தாக்கல் செய்யும் தேதி தவறினால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி என்ன நடக்கும்?

ITR காலக்கெடுவை தவறவிட்டால் ஏற்படும் விளைவுகள்: இந்தியாவில் உள்ள அனைவரும் ITR ஐ தாக்கல் செய்வது மிகவும் அவசியம். அதனை காலக்கெடுவுக்குள் செலுத்தாமல் தவறவிட்டால் பல்வேறு அபராதங்கள் மற்றும் வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டியிருக்கும்.

அபராதம்: உதாரணமாக உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ. 5000 வரை பெனால்டியாக விதிக்கப்படலாம். இது ரூ. 10000 வரை உயரலாம். மேலும் காலக்கெடுவை மீறி வரி செலுத்துவோர் section 234A வின் படி மாதத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டும். இந்த வட்டி விகிதம் வருமான வரித்துறை கூறிய காலக்கெடு முடிந்தபிறகே தொடங்குகிறது. நீங்கள் மேலும் நீண்ட தாமதமாக வரி செலுத்தினால் அதிக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டியிருக்கும்.

செக்சன் 271H இன் கீழ் அபராதம்: பிரிவு 234E இன் கீழ் தாமதமாக, குறிப்பிட்ட தேதிக்குள் TCS அல்லது TDS பைலிங் செய்ய முடியாத நபர்கள் ரூ. 10,000 முதல் ரூ. 1,00,000 வரை அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். பிரிவு 234E இன் கீழ் TCS அல்லது TDS செலுத்தப்படும் வரை அபராதமாக தினமும் ரூ. 200 செலுத்த வேண்டும். மேலும் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம். கடந்த மாதம் வருமான வரி தாக்கல் செய்யாத பெண் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தெரிந்தே வருமான வரி செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

எனவே, காலக்கெடுவை தவறவிட்டால் ITR ஐ ஃபைலிங் செய்யும்போது பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

வருமான வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டியவை: வருமான வரி துறை சார்பான விஷயங்களை சட்டபூர்வ இணையதளம் வாயிலாக அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டு இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே தங்களின் ஆலோசகரை அணுகி ஆலோசனைப் பெறலாம். மேலும் உங்களின் அனைத்து வரி டாக்குமெண்ட்களையும் சரி பார்த்த பின்னரே ITR தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பாதுகாப்பான நெறிமுறைகளைப் பின்பற்றும்போது நாம் அபராதங்களில் இருந்து விடுபட முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+