சென்னை: சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் கார்டை கட்டாயமாக்கியுள்ளது நிதி அமைச்சகம். சிறு சேமிப்புத் திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சிறு சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்ககளில் முதலீடு செய்ய, சில ஆவணங்களை நாம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் முதன்மையான ஆவணமாக ஆதார் கார்டை கொடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
பான் கார்டு, ஆதார் கார்டையும் இணைப்பதற்கான கடைசி தேதியாக ஜூன் 30, 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அனால், அவ்வாறு இணைக்கத் தவறியவர்கள், தற்போது ரூ. 1000 பெனால்டி செலுத்தி இணைக்க வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களும் கேஒய்சி சாரிபார்ப்புக்கு பயன்படுத்தும் முக்கிய ஆவணங்களாக உள்ளன. மேலும் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 3, 2023 ஆம் ஆண்டு நிதி அமைச்சகம், அரசு சேமிப்பு விதிகளின்படி(2023), ஒவ்வொரு தனிநபரும் சில ஆவணங்களை, சிறு சேமிப்புத் திட்டங்களில், கணக்கைத் தொடங்குவதற்கு முன் ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில் ஆதார் கார்டும் ஒன்று. ஆதார் கார்டு தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டங்களில் சேமிக்க விரும்புவோர்களிடம், ஆதார் கார்டு இல்லை என்றால், அவர்கள் ஆதார் கார்டை பெற்ற பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களின் கணக்கைத் திறக்க அந்த ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.
மேலும் சிறு சேமிப்பு கணக்கைத் தொடங்க விரும்புபவர்களிடம், ஆதார் கார்டு இல்லை எனும் பட்சத்தில் ஆதார் கார்டை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இதுபோன்ற நபர்கள், சிறுசேமிப்புத் திட்டங்களில் விண்ணப்பிக்கும் போது, அவர்கள் ப்ரூஃப் ஆஃப் அப்ளிகேஷன் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது ஆதார் கார்டு பதிய பயன்படுத்திய ஆவணம். அதன் பிறகு, அந்தத் திட்டத்தினை தொடங்குபவர் தங்களுக்கு ஆதார் கார்டு கிடைத்தவுடன், அதனை ஆறு மாதங்களுக்குள் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கும் கணக்குகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதார் கார்டு இல்லாமல் கணக்கைத் தொடங்கியவர் ஆறு மாதங்களுக்குள் ஆதார் கார்டை சமர்ப்பிக்கத் தவறினால் அவர்களுடைய அக்கவுண்ட் விவரங்கள் டி - ஆக்டிவேட் செய்யப்படும்.
மேலும் இந்த சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கை தொடங்க பான் கார்டும் அவசியமாகிறது. பான் கார்டு இல்லாமல் சிறு சேமிப்பு கணக்கை தொடங்குபவர்கள் அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு சென்று பான் கார்டு பெற்று, அதன் பிறகு சமர்ப்பிக்க வேண்டும்,
மேலும் ஆதார் கார்டு போலவே பான் கார்டும், கொடுக்காத நபர்கள் இரண்டு மாதங்களுக்குள் குறிப்பிட்ட, சிறுசேமிப்பு தொடங்கிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களது கணக்கு பான் கார்டு கொடுக்கும் வரை செயலிழக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications