சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிர்லா குடும்பம் கைப்பற்றுகிறதா..? எம்.எஸ்.தோனி நிலைமை என்ன..?

அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கையகப்படுத்த உள்ளதன் மூலம் தமிழ்நாட்டின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் பிர்லா குடும்பத்தின் கைக்கு செல்ல உள்ளது. இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-யின் நிலை என்ன..? ஐபிஎல் போட்டியில் முடிசூடா மன்னனாக இருக்கும் சிஎஸ்கே அணி பிர்லா குடும்பத்தின் கைக்கு செல்கிறதா..? தோனியின் நிலைமை என்ன..?

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதித்யா பிர்லா குழுமத்தின் சிமெண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், கடந்த ஜூன் மாதம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7,05,64,656 பங்குகளைப் பங்கு ஒன்றுக்கு ரூ.268 என வாங்கியது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77% பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிர்லா குடும்பம் கைப்பற்றுகிறதா..? எம்.எஸ்.தோனி நிலைமை என்ன..?

இதை தொடர்ந்து 2வது முறையாக அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர்கள் மற்றும் இணை நிறுவனங்களிடம் இருந்து 10,13,91,231 பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தில் 28.07.2024 அன்று கையெழுத்திட்டுள்ளது. இந்த 10.13 கோடி பங்குகளை ஒரு பங்கிற்கு ரூ.390 என மொத்தம் ரூ.3954 கோடி மதிப்பீட்டில் இந்த பங்குகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சுமார் 55 சதவீத பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் கைப்பற்றுகிறது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தை ஆதித்யா பிர்லா கைப்பற்றுகிறது. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த அச்சம் எழுந்துள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது தான் ஒற்றை வரி பதில். ஆனால் ஏன் பாதிக்கப்படாது என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது.

இந்திய பிரீமியர் லீக் போட்டியில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளை கைப்பற்றிய பின்பும் என்.ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தான் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உரிமையாளராக இருந்தது. இது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவாகவே இருந்து வந்தது.

என்.ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்தபோது விருப்ப முரண்பாடு குறித்து சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தனி நிறுவனமாக மாற்றியது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் பங்கு இருப்புக்கு இணையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் பங்குகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரர் கட்டமைப்பு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கட்டமைப்பின் Mirror Image ஆக மாறியது.

ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 29 சதவிகித பங்குகளை வைத்திருந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் 29 சதவிகித பங்குகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அதன்பின், ஸ்ரீனிவாசன் மகள் ரூபா குருநாத் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் விருப்ப முரண்பாடு பிரச்சனை அதிகரித்தது.

இதனையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு டிரஸ்ட் நிறுவனத்தை உருவாக்கி, அதற்கு ஸ்ரீனிவாசன் குடும்பத்தின் மொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்கு இருப்பை மாற்றினர். அதன்பின் ரூபா குருநாத் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை விட்டுவிட்டார்.

கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்த பதவியும் இல்லாததால், இந்த விருப்ப முரண்பாடு பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரர்களாக திரும்பினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையில் இந்த மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டின் முடிவில் ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 28.14 சதவிகித பங்குகளை வைத்துள்ளனர். சமீபத்திய ஆண்டு அறிக்கையில் ஏழு பேர் பங்குதாரர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இதில் EWS பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் (21.47%); ரூபா குருநாத், Financial Services & Securities Services Trust அமைப்பின் டிரஸ்டி(6.48%); என். சீனிவாசன் (0.14%); சித்ரா சீனிவாசன் (0.02%); ரூபா குருநாத் (0.01%); எஸ்.கே. அசோக் பாலாஜீ (0.02%); மற்றும் ராஜம் கிருஷ்ணமூர்த்தி (1,940 பங்குகள்). இவர்களில் யாருக்கும் முந்தைய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+