வாட்ஸ்அப்-ல் வரும் புது அப்டேட்.. இனி காதலர்களுக்கு பிரச்சனை தான்..!
நமது தகவல் பரிமாற்ற முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் ஒரு செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தில் தொடங்கி தொழில் சம்பந்தப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை என கூறலாம்.

வாட்ஸ் அப் செயலியில் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றங்களும் புதுப்புது அம்சங்களும் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது.
பீட்டா வெர்சன் கருவிகளில் இந்த புதிய அம்சத்தை வாட்ஸ் அப் பரிசோதனை செய்து வருகிறது. இதன்படி உங்களது காண்டாக்ட் லிஸ்டில் (contact list) இருப்பவர்கள் யாரெல்லாம் சில நிமிடங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஆன்லைனில் இருந்தார்கள் என்ற பட்டியல் இதில் காட்டப்படும் என தெரிகிறது.
வாட்ஸ் அப் தொடர்பான அப்டேட்டுகளை தொடர்ந்து ட்ராக்கிங் செய்து வரக்கூடிய டபிள்யூ ஏ பீட்டா இன்ஃபோ (wa beta info) என்ற தளத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி ஐபோனின் டெஸ்ட் பிளைட் ஆப் மூலம் இந்த அம்சமானது பரிசோதனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. ஆண்டிராய்டு கருவிகளிலும் பீட்டா வெர்சனில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவில் இது அனைத்து வாட்ஸ் அப் பயனாளர்களுக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது. வாட்ஸ் அப்பில் இனிமேல் ரிசென்டலி ஆன்லைன் (recently online) என்ற ஒரு அம்சத்தை விரைவில் அனைவருமே பயன்படுத்த முடியும்.
நமது தொடர்பில் உள்ளவர்களின் பட்டியலானது காண்டாக்ட் லிஸ்டில் காட்டப்படுகிறது. இதன் கூடவே ரீசன்ட்லி ஆன்லைன் என்ற ஒரு புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே யாரெல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பு ஆன்லைனில் இருந்தார்கள் என்பது தெரிய வரும். அதாவது நீங்க காண்டாக்ட் லிஸ்ட் க்கு செல்லும்போது முதலில் அண்மையில் ஆன்லைனில் இருந்தவர்களின் பட்டியலும் அதற்குப் பின்பு முழுதான காண்டாக்ட் பட்டியலும் காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாட்ஸ் அப்பில் லாஸ்ட் சீன் (last seen) என்ற அம்சம் உள்ளது. இதில் அந்த நபரின் பெயர் அல்லது எண்ணுக்கு கீழே கடைசியாக எப்போது வாட்ஸ் அப்பை பார்த்தால் என்பதை நேரத்துடன் காட்டி விடும். ஆனால் இதனை நாம் டிஸேபில் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
அப்படி தன்னுடைய லாஸ்ட் சீனை டிஸேபில் செய்தவர்களால் மற்றவர்களின் லாஸ்ட் சீனை காண முடியும். ஆனால் லாஸ்ட் சீன் அம்சமும், ரீசண்ட்லி ஆன்லைன் அம்சமும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. ரீசண்ட்லி ஆன்லைன் என்பதை நாம் இது போல அனேபில் செய்ய முடியுமா என்பது விரைவில் தெரிய வரும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications