வாட்ஸ் அப் நம் அனைவரும் பயன்படுத்தி வரும் ஒரு தளம் ஆகும். இது நம் செய்திகளை ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு பயன்படுகிறது. இந்த வாட்ஸ் அப் தளம், தற்போது மெட்டா நிறுவனத்திற்கு கீழ் உள்ளது. இதில் நாம் ஒருவருக்கு அனுப்பும் மெசேஜ்கள் end-end encryption மூலம் பாதுகாப்பானவையாக இருக்கும். இப்போது அந்நிறுவனம் பயனர்களின் பயோ டேட்டாக்களின் பாதுகாப்பை மேபடுத்தும் முயற்சியில் உள்ளது. இதில் ப்ரொபைல் புகைப்படங்களை நம் அனுமதியின்றி சேவ் (save) செய்ய மற்றும் ஸ்க்ரீன் ஷாட் (screenshot) எடுக்க முடியாத வண்ணம், புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
WabetaInfo-வின் தகவலின் படி, iOSக்கான நியூ வெர்சனை (new version) 24.12.10.74 அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனர்களின் ப்ரோபைல் படங்களை எந்த ஒரு அனுமதியும் இன்றி பிறரால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது எனக் கூறப்படுகிறது. அவர்கள் கொண்டு வந்த இந்த அம்சத்தின் மூலம் பயனர்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ப்ரொபைல் படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது.

தற்போதைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் மூலம் ஸ்கேம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் வாட்ஸ் அப்-பில் உள்ள பயனர்களின் ப்ரொபைல் படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து புதிய போலி அக்கவுண்ட்டை உருவாக்கி ஸ்கேம் செய்து வருகின்றனர். இதுபோன்ற ஸ்கேம்-களால் பயனர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் வாட்ஸ் அப் இதனை தடுப்பதற்காக இந்த முயற்சியில் இறங்கியது.
வாட்ஸ் அப் ப்ரொபைல் படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதன் மூலம் பல சிக்கல்களை பயனர்கள் அடைவதாக முன்பு கூறப்பட்டது. மேலும் இந்த வலைத்தளத்தில் பாதுகாப்பு இல்லை என்பது குறித்து பலரும் அச்சம் தெரிவித்தனர். ப்ரொபைல் படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தவுடன்,அப்படத்தை வைத்து தவறான செயல்களை செய்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. மெட்டா நிறுவனத்தின் புதிய அம்சத்தின் மூலம் உங்களுடைய DP-யை பிறரால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது.
வாட்ஸ்அப், பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில், ஸ்டேட்டஸ் அப்டேட் பகிரும் முன், அதற்கான தனிப்பட்ட தகவல் அமைப்புகளை (Privacy Settings) மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதோடு மட்டுமல்லாமல், வரும் அப்டேட்டில் குரூப் சாட்களுக்கு புதுமையான அம்சத்தையும் வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் குரூப் சாட்களில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், GIF-கள், ஆவணங்கள் மற்றும் இணைப்புகளை எளிதாகக் கண்காணிக்க முடியும். மேலும், இந்த அப்டேட்டில் மல்டிமீடியா ஃபைல்-களின் அளவு போன்ற தகவல்களும் வழங்கப்படும். இதன் மூலம், பயனர்கள் தங்களின் ஃபோன் ஸ்டோரேஜ்-ஐ சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications