இந்த 35 போன்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.. மெட்டா நிறுவனத்தின் அறிவிப்பால் பரபரப்பு!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் (Whatsapp) உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் ஒன்றாகும். மால்வேர் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக வாட்ஸ்அப் அப்ளிகேஷன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த அப்ளிகேஷனின் புதுப்பிப்பு சில ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படாது என்று கூறப்படுகிறது. Android 5.0 மற்றும் iOS 12-ஐ விட பழைய வெர்ஷன்களைக் கொண்ட ஃபோன்கள் பாதுகாப்பு மற்றும் பிற புதுப்பிப்புகளை வாட்ஸ்அப்-பில் பெற முடியாது என்று கூறப்படுகிறது.

CanalTech நிறுவனத்தின் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் தனது System Requirement எனப்படும் சிஸ்டம் அமைப்புகளை மாற்ற திட்டமிட்டு வருகிறது. எனவே இது சில பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐஃபோன்களில், இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த அனுமதிக்காது என்று கூறப்படுகிறது. இந்த அறிக்கையின்படி, சாம்சங், மோட்டோரோலா, ஹவாய், ஆப்பிள் போன்ற பிரபல பிராண்டுகளின் 35 ஸ்மார்ட்போன்கள் வாட்ஸ்அப் புதுப்பிப்புகள் அல்லது பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.

 இந்த 35 போன்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.. மெட்டா நிறுவனத்தின் அறிவிப்பால் பரபரப்பு!


விரைவில் வாட்ஸ்அப் சேவைகளை பெற முடியாத சாதனங்களின் பட்டியல் கீழே கொடுக்கபட்டுள்ள்ளது.

ஆப்பிள்: iPhone SE (2016), iPhone 5, iPhone 6, iPhone 6S, iPhone 6S Plus, iPhone 5C

Samsung: Galaxy Core, Galaxy Ace Plus, Galaxy Express 2, Galaxy Note 3, Galaxy Grand, Galaxy S3 Mini, Galaxy S4 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Zoom, Galaxy Note 3 Neo, Galaxy S3,

Huawei: Ascend G525, Ascend P6 S, Huawei C199, Huawei Y625, Huawei GX1s,

மோட்டோரோலா: மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ்

லெனோவா:
Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70, Lenovo S890

சோனி: Xperia Z1, Xperia E3

LG: Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7

உங்கள் ஸ்மார்ட்போன் இந்த பட்டியலில் இருந்தால், வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாமல் போகும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் புதிய அம்சங்களை அனுபவிக்கவும் புதிய ஸ்மார்ட்போனுக்கு மாறுவது பற்றி சிந்திப்பது நல்லது. அதிலும் பணி புரியும் சில ஊழியர்கள், மேற்கண்ட பட்டியலில் உள்ள போன்களை பயன்படுத்தினால், அவர்கள் உடனடியாக தங்களுடைய ஃபோன்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+