வாட்ஸ்அப் யூசர்கள் இனி 1 நிமிட நேர வீடியோவை தங்களது ஸ்டேட்டஸ் அப்டேட்டில் அப்லோடு செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை 30 நொடிகள் வரையிலான வீடியோக்களை மட்டுமே ஸ்டேட்டஸில் ஷேர் செய்ய முடியும். வாட்ஸ்அப்பில் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் அந்த நிறுவனம் தீவிரமாக உள்ளது.

புதிய அம்சங்கள் அறிமுகம்: கடந்த சில நாட்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் மிகவும் தரமான அம்சத்தை ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ளது. இந்தப் புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு நிமிட நேர விடியோவை தங்களது ஸ்டேட்டஸில் அப்டேட் செய்யலாம்.
பீட்டா பயனர்களுக்கு முதலில்: வாட்ஸ்அப் நிறுவனம் இந்த புதிய அம்சத்தை பீட்டா பயனர்களுக்காக வெளியிடுகிறது. நீங்கள் பீட்டா பயனராக இருந்தால், Android 2.24.7.6க்கான WhatsApp பீட்டாவில் இந்த அப்டேட்டை பார்க்கலாம். நிறுவனம் இந்த அம்சத்தை சில பீட்டா பயனர்களுக்கு மட்டும் வெளியிட்டுள்ளது.

பயனர்களின் பெரும் தேவையை கருத்தில் கொண்டு இந்த புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்டேட்டஸ் அப்டேட்களில் நீண்ட வீடியோக்களை பகிரும் விருப்பத்தை பயனர்கள் நீண்ட காலமாக கோரி வந்தனர். பீட்டா சோதனை முடிந்ததும், அதன் நிலையான பதிப்பு உலகளாவிய பயனர்களுக்காக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
QR குறியீடை ஸ்கேன் செய்யும் வசதி: UPI கட்டணத்துக்கான QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் புதிய அம்சம் WhatsApp-ல் வருகிறது. WABetaInfo படி, நிறுவனம் இந்த அம்சத்தை பீட்டா சோதனை செய்கிறது. புதிய அம்சம் பயனர்களுக்கு சாட் பட்டியலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் விருப்பத்தை வழங்குகிறது.
இதற்காக, சாட் பட்டியல் திரையின் மேற்புறத்தில் கேமரா ஐகானுக்கு அடுத்ததாக ஒரு புதிய ஐகான் காணப்படும். WABetaInfo தனது பதிவில் இதன் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. நிறுவனம் இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு 2.24.7.3க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் வெளியிடுகிறது. நிறுவனம் விரைவில் இந்த அம்சத்தின் பீட்டா சோதனையை நிறைவு செய்யும் மற்றும் அதன் நிலையான பதிப்பு உலகளாவிய பயனர்களுக்காக வெளியிடப்படும்.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications