Whatsapp-இல் இனி குறிப்பிட்ட சேவைகளை பயன்படுத்த கட்டணம்: இந்தியாவிலும் Subscription Model அறிமுகம்

உலகம் முழுவதும் பல லட்சம் கோடி பேரின் தகவல் தொடர்பு ஊடகமாக செயல்படுகிறது வாட்ஸ் அப். தனிப்பட்ட முறையில் தகவல் பரிமாற்றம், தொழில் ரீதியான தகவல் பரிமாற்றம், சிறு தொழில்கள் என வாட்ஸ் அப் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக இருக்கிறது. நாம் போன் செய்தால் கூட பலரும் எடுக்க மாட்டார்கள் ஆனால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்தால் ரிப்ளை செய்வார்கள். அந்த அளவிற்கு வாட்ஸ் அப் பயன்பாடு பரவி இருக்கிறது.

வாட்ஸ் அப் தாய் நிறுவனமான மெடா நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அவ்வப்போது வாட்ஸ் அப்பில் பல அப்டேட்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக வாட்ஸ்அப் பிளஸ் (Whatsapp Plus) என்ற சந்தா வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த இந்த சந்தா வசதி முதன்முறையாக இந்தியாவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Whatsapp-இல் இனி குறிப்பிட்ட சேவைகளை பயன்படுத்த கட்டணம்: இந்தியாவிலும் Subscription Model அறிமுகம்

இதன்படி மாதந்தோறும் 79 ரூபாய் சந்தா செலுத்தினால் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு பிரத்யேகமான வசதிகள் கிடைக்கும். இதற்காக சந்தா செலுத்தினால் தான் வாட்ஸ் அப்பே பயன்படுத்த முடியும் என கிடையாது. வழக்கம் போல நாம் இலவசமாக வாட்ஸ் அப் பயன்படுத்தலாம், ஆனால் கூடுதலாக சில வசதிகளை அதாவது பிரீமியம் சேவைகளை பெற சந்தா கட்டுவது அவசியம்.

Also Read

மாதம் தோறும் 79 ரூபாய் சந்தா செலுத்தும் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரத்யேகமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம். இது இலவசமாக பயன்படுத்துவோருக்கு கிடைக்காது. இது ஒரு வித பிரீமியம் அனுபவத்தை தரும். அதே போல சந்தா செலுத்தியவர்கள் வாட்ஸ்அப் செயலியின் தீம்-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

Whatsapp-இல் இனி குறிப்பிட்ட சேவைகளை பயன்படுத்த கட்டணம்: இந்தியாவிலும் Subscription Model அறிமுகம்

தற்போது நாம் போனில் எப்படி ஒவ்வொரு கான்டேக்டிற்கும் ஒரு ரிங்டோன் வைத்திருக்கிறோமோ அதே போல சந்தா செலுத்துபவர்கள் ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனியாக ரிங்டோனை அமைத்துக் கொள்ளலாம். மேலும் விருப்பமான சாட்டுகளை அதிகளவில் பின் செய்து கொள்ளலாம். மேலும் விருப்பமான ஐகானை தேர்ந்தெடுக்கும் வசதியும் இதில் கிடைக்கிறது.

இந்த புதிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ள மாதந்தோறும் ரூ.79 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட எந்த சேவைகளுக்கும் வசதிகளுக்கும்வாட்ஸ்அப் நிறுவனம் கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் முதன்முறையாக சந்தா முறையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முதல் ஒரு மாதத்திற்கு பயனர்கள் இதனை இலவசமாக பயன்படுத்த முடியும் அடுத்த மாதங்களில் இருந்து சந்தா செலுத்தி பயன்படுத்தலாம்.

Recommended For You

முதலில் உங்கள் போனில் வாட்ஸ் அப் செல்லுங்கள் அதில் Settings சென்றால் அங்கே Subscriptions என காட்டும். அதனை கிளிக் செய்ய வேண்டும்., இதனை அடுத்து free trail month என காட்டும் அதனை கிளிக் செய்து ஒரு மாதம் இந்த சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம் அதன் பின் சந்தா செலுத்த வேண்டும். இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவை இன்னும் வரவில்லை படிப்படியாக ஓரிரு நாட்களில் வந்துவிடும். எனவே சப்ஸ்கிரிப்ஷன் என வாட்ஸ் அப் செட்டிங்கில் காட்டவில்லை என்றால் நாளை அல்லது நாளை மறுதினம் வந்துவிடும்.

இந்த சந்தா செலுத்துவது கட்டாயமல்ல அது இல்லாமலே வாட்ஸ் அப்பில் வழக்கம் போல மெசேஜ் அனுப்பலாம் , கால் செய்யலாம் ஆனால் பிரீமியம் சேவைகளுக்கு மட்டும் சந்தா செலுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+