உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் மெசேஜ் அனுப்ப, வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் மேற்கொள்ள வாட்ஸ் அப் தான் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ் அப்பை பயன்படுத்தி மோசடி செய்யும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பயனர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றுவதை தடுப்பது, ஆன்லைன் மோசடி அழைப்புகளிலிருந்து பயனர்களை காப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை வாட்ஸ்அப்பில் Two-step verification என்ற இரண்டு முறை சரிபார்ப்பு இருந்தது. இதில் 6 இலக்க எண்கள் கொண்ட PIN பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஹேக்கர்கள் எளிதில் யூகிக்கும் வகையில் இது இருப்பதால் பின் நம்பர் முறையை வாட்ஸ்அப் தற்போது மாற்றியுள்ளது. எனவே இனி பயனர்கள் வெறும் எண்களுக்கு பதிலாக எழுத்துகள் (Alphabets), எண்கள் (Numbers) மற்றும் சிறப்பு குறியீடுகள் அதாவது @, $, போன்றவை அடங்கிய நீண்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்தலாம். இதனை பாஸ் கீ என வாட்ஸ் அப் அழைக்கிறது.
வாட்ஸ் அப்பில் பலரும் 123456 போன்ற எளிய எண்களை பின் நம்பராக பயன்படுத்தி வந்த நிலையில், ஹேக்கர்கள் எளிதாக இந்த கணக்குகளில் ஊடுறுவ முடிந்தது. ஆனால் இந்த புதிய கடினமான பாஸ்வேர்டுகள் இதில் இருந்து தற்காக்கும் என சொல்லப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு சாதனங்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவோர், தங்களது வாட்ஸ்அப் கணக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்கீகளை சேர்த்துக்கொள்ளலாம்.வாட்ஸ்அப் செயலியில் Settings சென்று Account இல் Passkeys என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கே உங்களின் பாஸ் கீ செட் செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் ஸ்பேம் மற்றும் ஸ்கேம் அழைப்புகளிலிருந்து பயனர்களை காப்பதற்காக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமிக்கப்படாத எண்களிலிருந்து அழைப்பு வரும்போது, அந்த அழைப்பை ஏற்பதா வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
மேலும் அந்த நபர் எந்த நாட்டை சேர்ந்தவர் , உங்களது பொதுவான குரூப்களில் அவர் இடம்பெற்றுள்ளாரா போன்ற கூடுதல் விவரங்கள் அழைப்புத்திரையில் காட்சியளிக்கும். பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பதற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்ற முயல்வார்கள் என்பதால், இந்த தகவல்கள் பயனர்கள் சற்று யோசித்து, சுதாரித்து கொண்டு அழைப்பை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வழிவகுக்கும். எனவே வாட்ஸ்அப் பயனர்கள் இனி பாஸ் கீ செட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

