இஸ்ரோவின் முன்னாள் ஊழியருக்கு இப்படி ஒரு நிலையா? மோசடிக்கு பலியாகி ரூ.83 லட்சம் அபேஸ்!

அரசு தொடர்ந்து மோசடி சம்பவங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஏமாறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறையவே இல்லை. அப்படித்தான் இன்றும் ஒரு மோசடி சம்பவத்தைப் பற்றி பார்க்கவுள்ளோம். ஏமாந்த நபர் ரூ.1,000 அல்ல ரூ.2,000 அல்ல ரூ.83.15 லட்சத்தை மோசடி மூலம் இழந்துள்ளார். தெரியாத நபர்களிடம் எப்படித்தான் இவ்வளவு பெரிய தொகையை ஏமாறுகின்றனர் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

அகமதாபாத்தில் உள்ள ராம்தேவ் நகரைச் சேர்ந்த 60 வயது நபரிடம் அதிக வருமானம் தருவதாகக் கூறி வாட்ஸாப் குரூப் ஒன்றில் இணைத்து சைபர் குற்றவாளிகள் ரூ.83.15 லட்சத்தை அபகரித்துள்ளனர்.

இஸ்ரோவின் முன்னாள் ஊழியருக்கு இப்படி ஒரு நிலையா? மோசடிக்கு பலியாகி ரூ.83 லட்சம் அபேஸ்!

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபர் இஸ்ரோவின் முன்னால் ஊழியர். பாதிக்கப்பட்ட நபருக்கு 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்று இஷானி மேத்தா என்ற நபரிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. மெசேஜ் அனுப்பிய அந்த நபர் ஸ்டாக் ட்ரேடிங் குரூப்பில் சேருமாறு பாதிக்கப்பட்ட நபரிடம் கூறியுள்ளார். அந்த குரூப்பை அர்ஜுன் இந்துஜா என்ற நபர் நிர்வகித்துள்ளார்.

குரூப்பின் பெயர் "002 அசட் அப்ரிசியேஷன் விஐபி குரூப்" என்று இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் குழுவில் சேர்ந்த பிறகு மோசடிக்காரர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளனர். அவரிடம் 5 முதல் 30 சதவீதம் வரை தினசரி வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளனர். குரூப்பில் இருந்த நபர்களின் பரிந்துரைகளை நம்பி பாதிக்கப்பட்ட நபரும் ஒரு பதிவுப் படிவத்தை நிரப்பியுள்ளார். பின்னர் ஆர் காரா (R gaara) என்ற போலி ஸ்டாக் டிரேடிங் செயலியை டவுன்லோட் செய்யும்படி குழுவில் இருந்த நபர்கள் கூறியுள்ளனர்.

அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்த பாதிக்கப்பட்ட நபர் பல பரிவர்த்தனைகளின் மூலம் தன் சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.83.15 லட்சத்தை குழுவில் பகிரப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் அவருடைய முதலீட்டுக்கு லாபம் கிடைத்தது போல காண்பிக்கப்பட்டுள்ளது. தான் செய்த முதலீட்டுக்கு உடனடியாக லாபம் கிடைத்ததாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய சேமிப்பை அனுப்பியுள்ளார்.

நடக்கும் அனைத்தையும் உண்மையானது போல காண்பிக்க மோசடிக்காரர்கள் முதலில் ரூ. 25,000 வரை அவருக்கு பணம் எடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளனர். அதன் பிறகு தீபக் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓவில் கணக்கு தொடங்க ரூ.70 லட்சம் கூடுதலாக தேவை என்று மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரிடம் கூறியுள்ளனர்.

மீண்டும் கூடுதலாக பணம் கேட்டதற்கு பாதிக்கப்பட்ட நபர் பணம் அனுப்ப மறுத்துள்ளார். உடனடியாக மோசடிக்காரர்கள் அந்த அப்ளிகேஷனை அணுகுவதை பிளாக் செய்துள்ளனர். பிறகு சற்று நேரத்திலேயே அவர்களை பாதிக்கப்பட்டவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு பிரபலமான பங்கு வர்த்தக நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் சைபர் கிரைம் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் சைபர் கிரைம் போலீசை அணுகியுள்ளார். தற்போது இந்த மோசடி சம்பவத்திற்கு நம்பிக்கை மீறல் மற்றும் சைபர் மோசடி தொடர்பான பல பிரிவுகளின் கீழ் புகார் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்கு படித்தவர்களே இப்படி ஏமாறும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. முடிந்த அளவு இதுபோன்ற செய்திகளை பார்க்கும் நபர்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே மோசடி சம்பவங்களை வெகுவாக குறைக்க முடியும். உங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரின் நிதி நலனைப் பாதுகாக்க அவ்வப்போது செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மோசடிக்காரர்களின் பொதுவான யுக்திகளை அவர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள். இது போன்ற சிறு விஷயங்களை செய்வதால் பெரிய நிதி இழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+