இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் குறுஞ்செய்தி பகிரும் செயலியான வாட்ஸ்அப், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மோடி அரசின் புதிய மீடியா கொள்கையில் இந்திய சட்டத்திற்கு எதிராக உள்ளது என வழக்குத் தொடுத்துள்ளதாக ரெயூட்டர் தெரிவித்துள்ளது.
மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய மீடியா கொள்கை இந்திய சட்டத்தில் இருக்கும் தனியுரிமை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ரெயூட்டர்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.
புதிய மீடியா கொள்கை
இப்புதிய மீடியா கொள்கையில் அரசு துறைகளின் கோரிக்கை படி ஒரு பதிவை யார் முதலில் செய்தார்கள் ("first originator of information") என்பதைச் சமுக வலைத்தள நிறுவனங்கள் கண்டறிந்து அரசுக்குத் தகவல் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் தளம்
புதிய மீடியா கொள்கையில் தவறு செய்தவர்களை மட்டுமே அடையாளம் காண வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அனுமதித்தாலும், இதை ஒரு பதிவுக்கு மட்டும் செய்ய முடியாது. காரணம் வாட்ஸ்அப் தளத்தில் அனைத்துப் பதிவுகள், குறுஞ்செய்திகளும் end-to-end encryption செய்யப்பட்டு உள்ளது.
தனியுரிமை பாதுகாப்பு விதிகள்
தற்போது புதிய மீடியா கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் குறுஞ்செய்தியை முதலில் அனுப்பியவருக்கு மட்டும் அல்லாமல், குறுஞ்செய்தியைப் பெற்றவர்களுக்கும் end-to-end encryption முறையை உடைக்க வேண்டும் என வாட்ஸ்அப் தனது வழக்கில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் தனியுரிமை பாதுகாப்பு விதிகள் உடைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் விளக்கம்
மேலும் ரெயூட்டர்ஸ் இந்த வழக்கின் புகார் அறிக்கையை நேரில் பார்க்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்தச் செய்தியை யாரும் உறுதி செய்ய மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளரும் இதுகுறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மோடி அரசு
புதிய மீடியா கொள்கையை அமல்படுத்துவதில் பல பிரச்சனைகள் உருவான வேளையில், இந்த வழக்கு மோடி தலைமையிலான அரசுக்கும், சமூக வலைதள நிறுவனம் மற்றும் டெக் நிறுவனங்களான பேஸ்புக், கூகுள், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் மத்தியிலான பிரச்சனையைப் பெரிதாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிவிட்டர் அலுவலகத்தில் போலீஸ்
சமீபத்தில் டிவிட்டர் சில முக்கியத் தலைவர்களின் டிவீட்டுக்கு "manipulated media" என லேபிள் செய்த நிலையில் காவல் அதிகாரிகள் டிவிட்டர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற காரணத்தால் சமுக வலைத்தள நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பேஸ்புக் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்
மேலும் இந்த வழக்கின் மூலம் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் புதிய மீடியா கொள்கைகளைத் தடுக்க முடியும், வாட்ஸ்அப் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த விதிகள் மூலம் பேஸ்புக் தனது தனியுரிமை பாதுகாப்பு விதிகள் உடைக்கப்படுகிறது எனக் கருதுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications