சென்னை: மத்திய அரசு எங்களைக் கட்டாயப்படுத்தினால், நாங்கள் கண்டிப்பாக இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை உலகெங்கும் வசிக்கும் 330 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 40 கோடி வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் வாட்ஸ்அப்-ஐ அதிகாரப்பூர்வ செயலியாக பயன்படுத்தி வருகின்றனர். நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் சக ஊழியர்களிடம் தகவல்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மத்திய அரசு, சிலர் போலியான தகவல்களை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்வதால், அவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு வாட்ஸ்அப் நிறுவனத்திடம், முதலில் இந்த போலியான செய்திகளை பகிர்ந்த நபர்களின் டேட்டாக்களை கேட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு கேட்கும்போது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகும் தகவல்களை முதல் முதலில் அனுப்பியவர் பற்றிய விவரங்களை கண்டறிந்து அழிக்க வேண்டும் என்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021ல் மாற்றம் செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து, விவரங்களை பகிர முடியாது எனக் கூறி வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வாட்ஸப்பில் அனுப்பப்படும் அனைத்துத் தகவல்களும் என்கிரிப்சன் முறையில் பாதுகாப்பாக அனுப்பப்படுகிறது. இதனை பயன்படுத்தும் 40 கோடி இந்தியர்கள், அதனை நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர் என்று மெட்டா நிறுவன வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் பயனாளர்களின் விவரங்களை வெளியிடக் கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளுக்கு முரணானது என்று மெட்டா நிறுவன வழக்கறிஞர் வாதித்தார். அரசின் இந்த நடவடிக்கை அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும், இந்த விதிமுறை முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிறகு இந்தியாவை விட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியேற வேண்டி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மெட்டா தரப்பு வழக்கறிஞர், உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய விதிமுறைகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் மத்திய அரசு எந்த சமயத்தில் எந்த வாட்ஸ்அப் தகவலை கேட்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், பல நூறு கோடி வாட்ஸ் அப் தகவல்களை பல ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மெட்டா தரப்பு வாதங்களை, கேட்டு அறிந்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications