பலருக்கும் வாட்ஸ்அப் ஒரு முக்கியமான மெசேஜிங் பிளாட்பார்மாக இருந்து வருகிறது. தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இன்று பல வழிகள் இருந்தாலும் வாய்ஸ் மெசேஜ்களின் மூலமாக பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம். உணர்வுபூர்வமாக விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ஸ் மெசேஜ்கள் சிறந்த வழி. ஆனால் சில சமயங்களில் வாய்ஸ் மெசேஜ்களை கேட்பது என்பது சவாலான விஷயமாக இருக்கும். முக்கியமாக சத்தம் இல்லாத இடங்களில் வாய்ஸ் மெசேஜ்களை ஆன் செய்து விட்டால் உடனே அருகில் இருப்பவர்களுக்கும் அவை கேட்டு விடும். இதுபோன்ற சிக்கல்களை கருத்தில் கொண்டு ஒரு அற்புதமான பியூச்சரை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.
அதுதான் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்டுகளாக மாற்றும் டிரான்ஸ்கிரிப்ட் அம்சம். சில நேரங்களில் மீட்டிங்கில் இருக்கும் போது வாய்ஸ் மெசேஜ் வரும். ஆனால் அது முக்கியமான நபரிடம் இருந்து வந்தால் அதை கண்டிப்பாக கேட்டாக வேண்டும். அதே சமயம் மீட்டிங்கில் இருந்து வெளியிலும் வர முடியாது. அப்படி இருந்தால் நீங்கள் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் வருகின்ற வாய்ஸ் மெசேஜ்களை உடனடியாக டெக்ஸ்டாக மாற்றி படிக்கலாம். இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

வாட்ஸ் அப்பில் ட்ரான்ஸ்கிரிப்ட் அம்சம் என்ன செய்யும்?: உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தால் இந்த ட்ரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்தி அவற்றை உடனடியாக டெக்ஸ்ட்டாக மாற்றி படிக்கலாம். இந்த ட்ரான்ஸ்கிரிப்ட் வசதி உங்கள் மொபைலில் நேரடியாக உருவாக்கப்படுகின்றன. எனவே வாட்ஸ்அப்பும் உங்களுடைய வாய்ஸ் மெசேஜ்களை கேட்கவோ அல்லது படிக்கவோ முடியாது.
ட்ரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?: வாட்ஸ் அப் வழங்கும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ் அப்பின் ரைட் கார்னரில் தெரியும் 3 புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு "செட்டிங்ஸ்" என்பதை கிளிக் செய்ய வேண்டும். செட்டிங்ஸ்-ற்க்குள் பல்வேறு ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.
அதில் "சாட்" என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் என்பதை ஆன் செய்ய வேண்டும். நீங்கள் ஆன் செய்தவுடன் எந்த மொழியில் டெக்ஸ்ட்களாக மாற்ற வேண்டும் என்பது கேட்கப்படும். தற்போது 4 மொழிகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இங்கிலீஷ் பலராலும் பயன்படுத்தப்படுகிறது எனவே நீங்கள் இங்கிலீஷை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான் "செட் அப் நவ்" என்பதை கிளிக் செய்து, உங்களுடைய வாய்ஸ் மெசேஜ்களை லாங் பிரஸ் செய்து ட்ரான்ஸ்கிரிப்ட் என்பதை கிளிக் செய்தால் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்ட் ஆக மாற்றி படிக்க முடியும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications