இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் புதிய மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளது. மெட்டா நிர்வாகம் பெரும் தொகை கொடுத்து வாங்கிய வாட்ஸ்அப் தளத்தில் புதிய வருமானம் ஈட்டும் வழிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் மற்றும் புதிய பெய்டு சப்ஸ்கிரிப்ஷன் அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா ஜூன் 16, 2025 அன்று அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் 50 கோடிக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய அனுபவத்தையும், வாய்ப்புகளையும் வழங்கும்.

விளம்பரங்கள் எங்கு தோன்றும்?: விளம்பரங்கள் வாட்ஸ்அப்பின் "அப்டேட்ஸ் டேப்" பிரிவில் மட்டுமே காணப்படும். இந்த பிரிவு 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தற்போது ஒவ்வொரு நாளும் 150 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இதில் "ஸ்டேட்டஸ்" மற்றும் "சேனல்கள்" ஆகிய அம்சங்கள் உள்ளன. ஸ்டேட்டஸ் மூலம் பயனர்கள் 24 மணி நேரத்தில் மறையும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பகிரலாம், இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்றது. இந்த ஸ்டேட்டஸ்களுக்கு இடையே விளம்பரங்கள் சேர்க்கப்பட உள்ளது. இதனால் மக்களின் அனுபவம் பெரிய அளவில் பாதிக்கப்படாது என மெட்டா தரப்பில் உறுதி செய்துள்ளது.
உலகளாவிய நிறுவனங்கள் இந்த விளம்பரங்கள் மூலம் தங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். மெட்டாவின் ப்ராடெக்ட் பிரிவு துணைத் தலைவர் ஆலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் கூறுகையில், "பர்சனல் மெசேஜிங்-கிற்கு மட்டுமே பயன்படுத்துவோர் இந்த விளம்பரங்களை பார்க்க வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.
மக்கள் தகவல் பாதுக்காப்பு: வாட்ஸ்அப் அதன் முக்கிய அம்சமான தனியுரிமையை தொடர்ந்து பாதுகாக்கும் என்று மெட்டா உறுதியளித்துள்ளது. பர்சனல் மெசேஜ், அழைப்புகள் மற்றும் குரூப் சேட் ஆகிய அனைத்தும் வழக்கம் போல் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும், இதனால் இத்தகவல்கள் எந்த காரணத்திற்காகவும் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படாது.
விளம்பரங்களை காட்டுவதற்கு, வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களின் நகரம் அல்லது நாடு, மொழி, பின்தொடரும் சேனல்கள் மற்றும் விளம்பரங்களுடனான தொடர்பு போன்ற குறைந்தபட்ச தகவல்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் பர்சனல் தகவல்களை பாதுகாப்பது என்பது பெரும் போராட்டமாக உள்ளது.
புரமோட்டட் சேனல்கள் மற்றும் பெய்டு சப்ஸ்கிரிப்ஷன்: வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு மெட்டா இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.
புரமோட்டட் சேனல்கள்: வணிகங்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டடர்கள் தங்கள் வாட்ஸ்அப் சேனல்களை "ஸ்பான்சர்" முத்திரையுடன் மக்களுக்கு விளம்பரப்படுத்தலாம். இதன் மூலம் புதிய பாலோவர்களை பெற முடியும். உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள சிறு வணிகங்கள், குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உள்ளவை, இதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர் தமிழ்நாடு முழுவதும் அல்லது பிற பெரு நகரங்களுக்கு விரிவுபடுத்தலாம்.
பெய்டு சப்ஸ்கிரிப்ஷன்: வாட்ஸ்அப் சேனலில் சப்ஸ்கிரைபர்களை சேர்த்த பின்பு அவர்களுக்கு பிரத்யேக கண்டென்ட்-களை கொடுக்க பெய்டு சப்ஸ்கிரிப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கன்டென்ட் கிரியேட்டர்கள் மட்டும் அல்லாமல் மெட்டாவும் பணம் சம்பாதிக்க முடியும்.
உதாரணமாக சமுக வலைத்தள பிரபலங்களுக்கு இந்த முறை பெரிய அளவில் வருமானத்தை தேடித்தரும். இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற தளத்தில் பகிரப்படாத ஸ்பெஷல் கன்டென்ட்களை பிரபலங்கள் பெய்டு சப்ஸ்கிரிப்ஷன் வாங்கியவர்களுக்கு தனியாக பகிரலாம். தற்போது மெட்டா இந்த பெய்டு சப்ஸ்கிரிப்ஷன் தொகைக்கு எவ்விதமான கமிஷன் வசூலிக்காது, ஆனால் எதிர்காலத்தில் 10% கமிஷனை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
நியூட்டன்-ரெக்ஸ் கூறுகையில், "வாட்ஸ்அப்பை வெறும் மெசேஜிங்க் செயலியாக மட்டுமல்லாமல், வணிகங்கள் மற்றும் கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஒரு முழுமையான தளமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்," என கூறியுள்ளார்.
எப்போது அறிமுகமாகும்?: இந்த புதிய அம்சங்கள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக உலக நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும். இன்னும் 2 மாதத்தில் இந்தியாவுக்கு வரலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications