இன்றைய சூழலில் ஒரு முன்னணி மெசேஜிங் தளமாக வாட்ஸ்அப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெசேஜிங் தளங்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது வாட்ஸ்அப் தான். அலுவலகங்களிலும் பல்வேறு பணிகளுக்காக வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பயனர்களுக்கு புதுப்புது அம்சங்களை உருவாக்குவதில் வாட்ஸ்அப் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது ஒரு புதிய அம்சம் வர இருக்கிறது. ஏதேனும் மெசேஜ்களை பயனர்கள் படிக்காமல் இருந்தாலோ அல்லது பார்க்காமல் இருந்தாலோ அவற்றைப் பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய அம்சம் கொண்டுவரப்படவுள்ளது. இந்த அம்சம் பயணங்களின் உரையாடல்களை நிர்வகிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WABetaInfo-வின் தகவலின்படி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.24.25.29-இல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மிஸ்ஸான செய்திகள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்புகிறது.

இந்த புதிய அம்சம் எவ்வாறு செயல்படும்?: பயனர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு உரையாடிய வரலாறை வைத்து அந்த மெசேஜ்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்காக இன்டெர்னல் அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது என்று அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி ஒரு நபரை தொடர்பு கொள்ளும் நபர்களின் மெசேஜ்களுக்கு நினைவூட்டல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை வாட்ஸ் அப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தால் அதன் பிறகு யாருடன் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொள்கிறார்களோ? அதை பொறுத்து இந்த புதிய அம்சம் வேலை செய்யும். இதற்கான எந்தவித டேட்டாவும் சர்வரில் ஸ்டோர் ஆகாது என்றும் கூறப்படுகிறது.
இந்த ரிமைண்டர் நோட்டிபிகேஷன்கள் படிக்காத செய்திகள் மற்றும் புதிய ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பீட்டா சோதனை கட்டத்தில் இந்த அம்சம் உள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால் வாட்ஸ்அப் பீட்டா திட்டத்தில் இணைந்து இந்த அம்சத்தை முயற்சித்துப் பார்க்கலாம். இந்தப் புதிய அம்சத்தை அணுக பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் அப்டேட் செய்ய வேண்டும்.
அதோடு ஒரே கிளிக்கில் அனைத்து ஸ்டிக்கரையும் இன்னொருவருக்கு அனுப்பும் "ஸ்டிக்கர் பேக்கையும்" வாட்சப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டிக்கர் பேக்கை பகிர்ந்து கொள்ள பயனர்கள் ஸ்டிக்கர் பிக்கரை திறந்து விரும்பிய பேக்கை தேர்ந்தெடுத்து "சென்ட்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications