சென்னை: படிக்காத புது மெசேஜ் நோட்டிபிகேஷன் தொல்லையாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு வாட்சப் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. வேலைக்கு செல்பவர்கள், அதற்கென்று தனி வாட்சப் பயன்படுத்துவார்கள். இது போன்ற நபர்கள் ஒருநாள் விடுமுறைக்குப் பிறகு மறுநாள் வாட்சப்பை திறக்கும் போது மள மளவென மெசேஜ் வந்து குவிந்திருக்கும். இது பயன்படுத்துபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால், அதனை நிர்வகிக்க ஒரு புதிய அம்சத்தை வாட்சப் உருவாக்கி வருகிறது.
வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல வீட்டில் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து படிக்காத புது மெசேஜ்கள் ஒட்டுமொத்தமாக வருவது சிக்கலாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் Unread Message என்று கூறுவர். இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க வாட்சப் தற்போது களமிறங்கியுள்ளது.

இந்த அம்சம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தானாகவே படிக்காத மெசேஜ்களின் எண்ணிக்கையை வாட்சப் கிளியர் செய்து விடும். இந்தப் புது அம்சம் இன்னும் டெவலப்மெண்ட் ஸ்டேஜில் தான் உள்ளது. இதன் மூலம் வாட்சப்பை திறக்கும் பயனர்கள் திறம்பட நிர்வகிக்க முடியும்.
வாட்சப் பீட்டா இன்ஃபோவில் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்-இன் படி, இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு படிக்காத மெசேஜ்களின் எண்ணிக்கையை தானாகவே குறைக்கும் விருப்பத்தை அனுமதிக்கிறது. அதாவது ஒவ்வொரு முறையும் பயனர் வாட்சப்பை திறக்கும் போது ஏற்கனவே உள்ள படிக்காத மெசேஜ்கள் பூஜ்ஜியத்திற்கு மாற்றியமைக்கப்படும். இந்த அம்சத்தின் முதன்மையான குறிக்கோள் வாட்சப்பிற்கு வரும் பயனர்கள் குழப்பத்தை தவிர்த்து பல செய்திகள் கொண்டிருப்பதால் எந்த செய்தி முதன்மையானது என்பதை அறிவதற்கே. அதுவும் தற்போது ஒரு நபர் குறைந்தது 20 முதல் 30 வாட்ஸ் அப் குரூப்களிலாவது இருக்கின்றனர். இதுபோன்ற நபர்களுக்கு உதவுவதற்காக தான் இந்த அம்சம் கொண்டுவரப்பட இருக்கிறது.
உங்களுக்கு தற்போது ஒரு சந்தேகம் வரலாம்.. ஏதேனும் முக்கியமான மெசேஜ்கள் வந்தால் அதுவும் கிளியர் செய்யப்படுமா என்று. அதற்கு கூடுதலாக சாட் ஃபில்டர் ஆப்ஷனையும் வாட்சப் கொண்டு வர இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு முக்கியமான அல்லது விருப்பமான நபர்களின் மெசேஜ்களை, நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மற்ற மெசேஜ்களை மட்டுமே கிளியர் செய்யும்.
சமீப காலமாக வாட்சப் நிறைய பயனுள்ள அம்சங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது. அதன்படி பயனர்களின் பிரைவசியைக் கருத்தில் கொண்டு Lock Chat எனும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாட்சப் ஸ்கிரீனில் தெரியாத படி ஒருவருக்கு உங்களால் மெசேஜ் செய்ய முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications