கோடிக்கணக்கான வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. வழக்கமாக நாம் ஒருவருடன் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய போன் நம்பரை தான் தந்தாக வேண்டும். அனைவரிடமும் நம் போன் நம்பர் இருப்பது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல இருந்தாலும் வேறு வழியில்லாமல் போன் நம்பரை தருகிறோம். இனி போன் நம்பருக்கே வேலையில்லை.
வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்கள் தொலைபேசி எண்ணை பகிராமலேயே மற்றவர்களுடன் உரையாடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் பிரைவசியை கருத்தில் கொண்டு, புதிதாக 'பயனர் பெயர்' (Username) என்ற வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தாமல், ஒரு தனித்துவமான பயனர் பெயர் மூலம் நீங்கள் எளிதாக வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ள முடியும்.

இதன்படி வாட்ஸ் அப் பயனர்கள் தங்களுக்கு பிடித்த தனித்துவமான பயனர் பெயரை உருவாக்கிக்கொள்ளலாம். நாம் எப்படி ஜிமெயில் , பேஸ்புக் போன்றவற்றில் எல்லாம் யூஸர் நேம் வைத்திருக்கிறோமோ அதே போல தான் இதிலும் பயனர் பெயரை உருவாக்கி அதனை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். யாரேனும் உங்களுடன் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இந்த யூஸர் நேமை கொடுத்தாலே போதும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் போல அல்லாமல், வாட்ஸ்அப்பில் பொதுவான தேடல் வசதி இருக்காது. உங்கள் பயனர் பெயர் தெரிந்தவர்களால் மட்டுமே உங்களை தொடர்பு கொள்ள முடியும். எனவே தேவையற்ற மெசேஜ்கள் மற்றும் ஸ்பேம்கள் தொல்லையில் இருந்து விடுதலை.

உங்களுக்கான யூஸர் நேம் எனப்படும் பயனர் பெயரை எப்படி உருவாக்குவது என முதலில் தெரிந்து கொள்ளலாம்.
- நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோரில் அப்டேட் செய்ய வேண்டும்.
- பின்னர் Settings சென்று Account-ஐ கிளிக் செய்து Username என்ற பகுதிக்குச் செல்லுங்கள்.
- அங்கு உங்களுக்கு விருப்பமான பயனர் பெயரை தேர்வு செய்யலாம். ஒருவேளை நீங்கள் விரும்பும் பெயர் ஏற்கனவே இருந்தால், வாட்ஸ்அப் உங்களுக்குப் பரிந்துரைகளை வழங்கும்.
வணிக நிறுவனங்கள், கண்டண்ட் கிரியேட்டர்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் பயன்படுத்தும் அதே பெயரை வாட்ஸ்அப்பிலும் பயனர் பெயராக வைத்துக்கொள்ளலாம்.
அனைத்து வாட்ஸ் அப் பயனர்களும் பயனர் பெயரை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. பழையபடி உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தியும் நீங்கள் வாட்ஸ்அப்பில் உரையாடலாம். என்னுடைய மொபைல் எண்ணை அனைவருக்கும் கொடுக்க விரும்பவில்லை என்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் யூஸர் நேம் வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் கணக்கிற்கு இந்த வசதி வந்ததும், வாட்ஸ்அப் உங்களுக்கு அறிவிப்பு அனுப்பும். பயனர்களின் பிரைவசியை மேலும் உறுதிப்படுத்தும் இந்த புதிய முயற்சியை வாட்ஸ்அப் நிறுவனம் தீவிரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிமுதல் உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

