வாட்ஸ் அப் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு முறையையே பெரிய அளவில் மாற்றி இருக்கிறது என கூறலாம் . பயன்படுத்த எளிதாக இருப்பதால் நாள் தோறும் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதுமே பரவலாக பயன்படுத்தப்படக்கூடிய ஒரு தகவல் தொடர்பு செயலியாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது வாட்ஸ் அப்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்துமே வருகின்றன. வாட்ஸ் அப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது மெடா. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் ப்ரொபைல் பிக்சர் (Profile picture) தொடர்பான ஒரு முக்கியமான மாற்றத்தை அறிவித்திருக்கிறது. இதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் இனி தங்களுடைய வாட்ஸ் அப் ப்ரொபைல் பிக்சரை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இருந்து நேரடியாக Import செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய ப்ரொபைல் பிக்சரை நேரடியாக பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இருந்து இம்போர்ட் செய்து செட் செய்து கொள்ளலாம். தற்போதைக்கு வாட்ஸ் அப்பின் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. படிப்படியாக அடுத்த சில வாரங்களில் இது அனைத்து பயனாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுடைய ப்ரொபைல் பிக்சர் பட்டனை கிளிக் செய்ய வேண்டும் . அதில் வழக்கம் போல கேமரா, கேலரி ,அவதார் மற்றும் ஏஐ இமேஜ் ஆகிய ஆப்ஷன்களோடு சேர்ந்து இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவையும் காட்டும். இதில் நாம் பேஸ்புக்கில் இருக்கும் படத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கிளிக் செய்ய வேண்டும் அல்லது இன்ஸ்டா படத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கிளிக் செய்ய வேண்டும்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்க கூடிய நபர்களுக்கு இந்த வசதி பெரிய உதவியாக இருக்கும். வாட்ஸ் அப் பயனர்கள் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா அக்கவுண்ட் சென்டர் வாயிலாக வாட்ஸ்அப் போடு இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் மட்டுமே இதுபோல ப்ரொபைல் பிக்சரை இம்போர்ட் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
விரைவில் இந்த மூன்று செயலிகளையும் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக மெட்டா நிறுவனம் கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications