நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் மக்களின் தகவல் தொடர்பு முறைகளே பெரிய அளவில் மாற்றம் கண்டுவிட்டன. வாட்ஸ் அப், டெலிகிராம், அரட்டை என பல்வேறு செயலிகளும் தற்போது இன்றியமையாத தகவல் தொடர்பு செயலிகளாக மாறிவிட்டன. உலகம் முழுவதும் கோடி கணக்கானவர்கள் whatsapp உள்ளிட்ட செயலிகள் வாயிலாக தான் தகவல் தொடர்பை மேற்கொள்கிறார்கள்.
ஒரு மெசேஜ் அனுப்புவதில் தொடங்கி , வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் அழைப்புகள், மீட்டிங்குகள் , தொழில் ரீதியான இணைப்புகள் , குழுக்கள் என ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கானவர்களால் வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகியவற்றை நாம் போனில் பதிவிறக்கம் செய்யும் போது ஆக்டிவான சிம் கார்டு தேவை. அதன் பின்னர் சிம் கார்டு இல்லாமல் இணைய வசதி இருந்தாலே இதனை பயன்படுத்தலாம்.

அதே போல வாட்ஸ் அப் வெப் என்ற சேவை மூலம் நாம் டேப், லேப்டாப், டெஸ்க்டாப் ஆகிய கருவிகள் வாயிலாகவும் வாட்ஸ் அப் சேவை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு முறை லாகின் செய்துவிட்டால் பல மாதங்களுக்கு வாட்ஸ் அப் வெப்பை பயன்படுத்த முடியும். ஆனால் இந்த வசதிகளுக்கு மத்திய அரசு ஆப்பு வைத்திருக்கிறது.
மத்திய அரசு வாட்ஸ் அப், டெலிகிராம், அரட்டை செயலி பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்தியாவில் மெசேஜிங் செயலிகளை பயன்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகம். இதன்படி மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லா விட்டால் இனி வாட்ஸ் அப் கணக்கு இயங்காது என தெரிவித்து இருக்கிறது.

மொபைலில் உள்ள சிம்கார்டு அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. அதேபோல வெப்பில வாட்ஸ் அப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இனி 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே அது லாக் அவுட் ஆகிவிடும் . ஆறு மணி நேரம் கழித்து மீண்டும் நீங்கள் கியூ ஆர் கோடு பயன்படுத்தி ஸ்கேன் செய்த பிறகுதான் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தியர்கள் இனி தங்கள் போனில் வாட்ஸ் அப், சிக்னல், அரட்டை, டெலிகிராம், ஷேர் சாட், ஸ்நாப் சாட் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு சிம் கார்டு கட்டாயம் . சிம் கார்டை நீங்கள் அகற்றினாலும் அல்லது சிம்கார்டு செயலிழந்து விட்டாலும் இந்த செயலிகள் இனி பயன்படுத்த முடியாது.
சைபர் மோசடி கும்பல்கள் சிம்கார்டை பயன்படுத்தாமல் இணையத்தை மட்டும் பயன்படுத்தி whatsapp காலில் பேசி மக்களை ஏமாற்றி வருவது அதிகரித்துள்ளது, இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது, தற்போது வங்கி சார்ந்த வங்கி சேவை சார்ந்த செயலிகளை பயன்படுத்த சிம் கார்டுகள் கட்டாயம் அதே நடைமுறையை சமூக வலைத்தளங்களுக்கும் அமல்படுத்த உள்ளோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மெசேஜிங் நிறுவனங்கள் இதனை அமல்படுத்தி 4 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஆக்டிவான சிம் கார்டு இருந்தால் மட்டுமே இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும், வாட்ஸ் அப் வெப் சேவையை ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒரு முறையும் லாகின் செய்ய வேண்டும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications