நிதி தொடர்பான மோசடிகள் சமீபகாலமாக அதிகமாக நடக்கிறது. அதற்கு ஏதுவாக மோசடிக்காரர்கள் புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர். டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, போலி இணையதளங்களின் மூலம் மோசடி, பார்சல் வந்திருப்பதாக கூறி மோசடி என பல்வேறு வகையான யுக்திகளை பின்பற்றி அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த வகையில் புதிதாக இன்னொரு ட்ரிக்கையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்தும் தனி நபர்களின் விவரங்களை குறி வைத்து போலியான திருமண அழைப்பிதழ்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆம்.. திருமண அழைப்பிதழ்கள் போலவே காட்சியளிக்கும் பைலை அனுப்புகின்றனர். இது உண்மையில் அழைப்பிதழ் கிடையாது. அழைப்பிதழ் போலவே இருக்கும் தீங்கிழைக்கும் APK பைல்லாகும்.

சைபர் நிபுணர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இதுபோன்ற செய்திகள் தெரியாத நம்பரில் இருந்து வருவதாகவும், அப்பாவி மக்கள் திருமண அழைப்பிதழ் என்று நினைத்து ஆபத்தான சாஃப்ட்வேரை தங்கள் மொபைலில் தங்களுக்கே தெரியாமல் பதிவிறக்கம் செய்துவிடுவதாகவும் எச்சரிக்கின்றனர்.
டவுன்லோட் செய்யப்பட்ட ஃபைல் மூலம் சைபர் கிரிமினல்கள் பிறரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், முக்கியமான டேட்டாவை எடுப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். எனவே திருமண அழைப்பிதழ் போல தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் மொபைலில் எதையும் டவுன்லோட் செய்வதற்கு முன்பு அனுப்புனரையும், வந்திருக்கும் ஃபைலையும் சரி பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஹிமாச்சல் பிரதேசின் சிஐடி மற்றும் சைபர் கிரைம் துறையைச் சேர்ந்த மோஹித் சாவ்லா எச்சரித்துள்ளார்.
திருமண அழைப்பிதழ் மோசடி எப்படி நடக்கிறது?: போலியான அழைப்புகளை மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புகின்றனர். இன்றைய வேகமான உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதனால் உண்மையிலேயே பத்திரிக்கை தான் வந்துள்ளது என்று நினைத்து தீங்கிழைக்கும் ஏபிகே ஃபைலை அறியாத மக்கள் டவுன்லோட் செய்து விடுகின்றனர். இப்படி டவுன்லோட் செய்யப்படும் பைல் பிறகு சாதனங்களில் இருக்கும் டேட்டாவை நேரடியாக கட்டுப்படுத்தும் வாய்ப்பை மோசடிக்காரர்களுக்கு வழங்குகிறது.
ஹிமாச்சலப் பிரதேச சைபர் கிரைம் காவல்துறையினர் அம்மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மோசடிகள், டேட்டா மீறல்கள், தீங்கிழைக்கும் இணைய செயல்பாடுகள் போன்றவற்றை தடுப்பதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டம் செயல்பட்டு வருகிறது.
இது போன்ற இணையக் குற்றங்கள் கண்டறியப்பட்டால் ஏமாற்றுபவர்களுக்கு 3 வருட சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். மேலும் இதுபோன்ற தீங்கிழைக்கும் லிங்க் உங்களுக்கு அனுப்பப்பட்டால் நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு செல்லலாம் அல்லது cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலில் புகார் அளிக்கலாம்.
வெளிநாடுகளில் இருப்பவர்களை மெசேஜிங் தளங்கள் தான் ஒன்றிணைக்கிறது. சிலர் நீண்ட தூரத்திலிருந்து வரமுடியாத காரணத்தினால் வாட்ஸ் அப் அல்லது பிற அப்ளிகேஷன்கள் மூலம் திருமண அழைப்பிதழ்கள் போன்றவற்றை அனுப்பலாம். அதையும் ஒரு யுக்தியாக கையாண்டு மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications