சென்னை: வாட்ஸ்அப் செயலியின் யூசர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில், போட்டோ, வீடியோ, PDF மற்றும் டாக்குமெண்ட்களை பகிர்வதில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான அம்சத்தை வெளியிட உள்ளது. வரவிருக்கும் இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் யூசர்களை இன்டர்நெட் இல்லாமல் ஃபைல்-ஷேரிங் செய்ய அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப், அனைவரும் பயன்பெறும் வகையில் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது யூசர்களுக்கு இன்டர்நெட் இல்லாவிட்டாலும் போட்டோக்களைப் பகிர்வதை எளிதாக்கும் எனக் கூறப்படுகிறது.

போட்டோக்கள், வீடியோக்கள், மியூசிக் மற்றும் டாக்குமெண்ட்களை ஆஃப்லைனில் ஷேர் செய்ய அனுமதிக்கும் வகையில் இந்த புதிய அப்டேட் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்டர்நெட் இல்லாமல் ப்ளூடூத் வாயிலாக பல்வேறு வகையான மீடியாக்களை ஷேர் செய்ய யூசர்களை அனுமதிக்கும் வகையில் வாட்ஸ்அப் இந்த அம்சத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது. மேலும் ஷேர் செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் என்க்ரிப்ட் செய்யப்படும். இதனால் ஸ்கேம் செய்யும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
மோசமான இன்டர்நெட் இணைப்பு உள்ள பகுதிகளில் இருக்கும் வாட்ஸ்அப் யூசர்களுக்கு, ப்ளூடூத் வாயிலான பைல் ஷேரிங் முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம், வாட்ஸ்அப், இன்டர்நெட் வசதியைப் பொருட்படுத்தாமல் தடையற்ற தகவல்தொடர்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
WABetaInfo-வில் வெளியான சமீபத்திய ஸ்கிரீன் ஷாட்களை பார்க்கும் போது, இந்த அப்டேட்டை செயல்படுத்த, வாட்ஸ்அப் தேவைப்படும் அனுமதிகளைக் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றெல்லாம் எந்த ஆப்களை டவுன்லோட் செய்தாலும், அவை யூசரிடம் பல அனுமதிகளைக் கேட்கின்றன. அதுபோல இந்த வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்டை பயன்படுத்தவும் நீங்கள் அனுமதிகளை வழங்க வேண்டும்.
அருகிலுள்ள சாதனங்களைக் கண்டறிவதைத் தவிர, உங்கள் மொபைலில் உள்ள சிஸ்டம் டாக்குமெண்ட்ஸ் மற்றும் போட்டோ கேலரிக்கும்,வாட்ஸ்அப்-க்கு அனுமதி தேவைப்படும். பிற டிவைஸ்களை இணைக்க, நெருக்கமாக உள்ளனரா என்பதைச் சரிபார்க்க, லொகேஷன் அனுமதியும் தேவைப்படும்.
இந்த அனுமதிகள் இருந்தபோதிலும், WhatsApp ஃபோன் நம்பர் மற்றும் நீங்கள் ஷேர் செய்த அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்படும். இந்த வகை என்க்ரிப்ட் மெசேஜ் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த செயல்முறையை வடிவமைத்துள்ளது.
ஷேர்ஐடி போன்ற பியர்-டு-பியர் ஃபைல்-ஷேரிங் அப்ளிகேஷன்கள் எப்படிச் செயல்படுகிறதோ அதைப் போலவே இந்தப் புதிய அம்சமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்லுலார் அல்லது வைஃபை இணைப்பு இல்லாமல் ஷேர் செய்ய, யூசர்களை அனுமதிக்கின்றன.
WhatsApp யூசர்கள் அடிக்கடி பல்வேறு வகையான மீடியா ஃபைல் மற்றும் டாக்குமெண்ட்களைப் பகிர்ந்து கொள்வதால், இந்த புதிய அப்டேட் ஒரு பயனுள்ள வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
ஆஃப்லைன் ஃபைல்-ஷேர், வாட்ஸ்அப்பின் தகவல்தொடர்புகளின் வளர்ந்து வரும் போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதால், பயனர்களின் ஒட்டுமொத்த வாட்ஸ்அப் பயன்பாட்டில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications