மும்பையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவு ஆர்டர் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரையில் பல சேவைகள் தற்போது இணையம் வாயிலாக கிடைப்பதால் மக்களின் வாழ்க்கை எளிமையாகியுள்ளது. ஆனால் இந்தியர்களை இதை மாறுப்பட்ட முறையிலும், சுவாரஸ்யமான முறையிலும் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர். அப்பட்ட ஒரு விஷயம் தான் தற்போது மும்பையில் நடந்துள்ளது.
முதலீட்டு வங்கியாளரான ரிஷப் அகர்வால் தனது சகோதரி காலை 6 மணி விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் தனது அம்மாவிடம் 3 மணிக்கு எழுப்பச் சொல்லியிருந்தார்.

ஆனால் காலை 3.15 மணிக்கு ரிஷப்-ன் அம்மா அவரை அழைத்து, சகோதரியின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டதாக பதறினார். அந்த நேரத்தில் மும்பை Parel-ல் இருந்து போவாய்க்கு செல்வது 40 நிமிடங்கள் ஆகும். நேரம் குறைவாக இருந்ததால், ரிஷப் ஒரு புத்திசாலித்தனமான யோசனை வந்தது. ஜெப்டோ (Zepto) ஆப் மூலம் ஆர்டர் செய்தார்.
காலை 3.20 மணிக்கு ஆர்டர் செய்து, டெலிவரி செய்யும் நபரான விகாஸிடம் தனது சகோதரியை எழுப்ப வேண்டும் என்ற அவசரத்தை தெரிவித்தார். விகாஸ் உடனடியாக ஒப்புக்கொண்டு, குடும்பத்தினருடன் போனில் தொடர்பில் இருந்து கொண்டே 3.30 மணிக்குள் ரிஷப் கொடுத்த முகவரிக்கு ஆர்டர் உடன் டெலிவரி செய்தார். வீட்டில் காலிங் பெல் அடித்து அவரை எழுப்பி கதவு திறக்கும் வரையில் காத்திருந்து ஆர்டரை முடித்துள்ளார் விகாஸ். இதனால் அவரது சகோதரி சரியான நேரத்தில் எழுந்து விமான நிலையத்தை சென்றுள்ளார்.
ரிஷப் இந்த சம்பவத்தை லிங்க்ட்இனில் பகிர்ந்தபோது, ஜெப்டோ ஒரு கிராசரி டெலிவரி சேவையாக மட்டுமல்லாமல், "குடும்ப உறுப்பினர்களின் safety check" ஆகவும் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்த பதிவு வைரலானது. பலரும் டெக்னாலஜி எப்படி உண்மையான அவசரகாலங்களில் உதவுகிறது என்று பாராட்டினர்.
இந்த செய்தி ஜெப்டோ நிர்வாகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. ஜெப்டோவின் தலைமை பிராண்ட் அதிகாரி Chandan Mendiratta நகைச்சுவையாக "நாங்கள் அலாரம் கடிகாரங்களை டெலிவரி செய்வது தெரியும், ஆனால் நாங்களே இப்போது அலாரமாக மாறிவிட்டோம்" என்று பதிவிட்டார். ஜெப்டோவின் COO விகாஸ் ஷர்மா, டெலிவரி நபர் விகாஸின் அர்ப்பணிப்பை பாராட்டி, "வாடிக்கையாளருக்கு உதவுவதில் அவர் காட்டிய அக்கறைக்கு பெருமைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டார்.
டெக்னாலஜி எப்படி இருந்தாலும், இதை எப்படி நமக்காக பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்தியர்கள் எப்போதும் கில்லாடிகள் தான். இதேபோல் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல பலர் உபர், ஓலா டாக்சியை புக் செய்யாமல் ஸ்விக்கி, சோமேட்டோ மூலம் தனதுக்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி பார்ட்னர் உடன் வீட்டுக்கு செல்வதை பலர் செய்துள்ளனர்.
இப்படி இந்தியர்களின் மாறுப்பட்ட சிந்தனை பல முறை இணையத்தில் பேசப்பட்டு உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications