EPF-ன் 8.15% வட்டி எப்போது கிடைக்கும்.. டிவிட்டரில் பறக்கும் கேள்வி..!

EPFO அமைப்பு 2022-23 ஆம் நிதியாண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 8.15% ஆக நிர்ணயம் செய்து ஜூலை மாதத்தில் அறிவித்துள்ளது. EPF கணக்குகளுக்குகளில் ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களும் பல வருடமாக பணியாற்றி சேமித்து வைத்த தொகைக்கு வட்டி வருமானம் கிடைக்க உள்ளது.

பலர் கூடுதல் வருமானத்திற்காக VPF வாயிலாக கூடுதல் பணத்தையும் ஒவ்வொரு மாத சம்பளத்தில் செலுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் வாயிலாக EPFO அமைப்பு அளிக்கும் EPF கணக்கில் உள்ள சேமிப்பிற்கான வட்டி வருமானம் மிகவும் முக்கியமானது.

EPF-ன் 8.15% வட்டி எப்போது கிடைக்கும்.. டிவிட்டரில் பறக்கும் கேள்வி..!

EPFO அமைப்பு ஜூலை 24 வெளயிட்ட அறிக்கையில் அனைத்து EPF கணக்காளர்களுக்கும் தங்களுடைய சேமிப்பிற்கு 8.15 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இந்த வட்டி வருமானம் எப்போது கிடைக்கும் என்பது தான் அனைத்து மாத சம்பளக்காரர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் சமுக வலைத்தளத்தில் எப்போது வட்டி வருமானம் கிரெடிட் செய்யப்படும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 2022-23 ஆம் நிதியாண்டுக்கான EPF சேமிப்புக்கான வட்டி தொகை இதுவரையில் கிரெடிட் செய்யப்படவில்லை எப்போது கிடைக்கும் என கேட்க துவங்கியுள்ளனர்.

டிஜிட்டல் இந்தியாவில் இருந்துக்கொண்டு ஜூலை 24 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட வட்டி விகிதம் இதுவரையில் அளிக்கப்படாமல் உள்ளது எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வட்டி விகித கணக்கு மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுவதால் எவ்விதமான இழப்பும் மக்களுக்கு இருக்காது. இதேபோல் ஒவ்வொரு வருடமும் ஈபிஎப்ஓ வட்டி விகிதத்தை தாமதமாக செலுத்துவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது.

இந்த நிலையில் வட்டி வருமானத்திற்காக காத்திருப்போர் சொந்து தங்களுடைய EPF கணக்கை செக் செய்வது மிகவும் சிறந்தது. UMANG செயலி மூலம் PF இருப்பை செக் செய்வது மிகவும் எளியது.
படி 1: உமாங் செயலியை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்
படி 2: EPFO தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து லாகின் செய்ய வேண்டும்.
படி 3: லாக்கின் செய்யப்பட்ட உடன் "EPFO" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
படி 4: பின்பு "பாஸ்புக்கைக் காண்க" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: உங்கள் UAN ஐ உள்ளிட்ட பிறகு, OTP ஐப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: OTP கொடுத்து உள்நுழைய வேண்டும். அவ்வளவு தான் உங்கள் பாஸ்புக் மற்றும் EPF இருப்பு திரையில் காட்டப்படும்.

மத்திய அரசு 2021-22 ஆம் நிதியாண்டுக்கு 8.10 சதவீத வட்டி வருமானத்தை கொடுத்த நிலையில் தற்போது 0.05 சதவீதம் அதிகரித்து மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டுக்கு அளிக்க உள்ளது. 2010-11 ஆம் நிதியாண்டில் அதிகப்படியாக 9.50 சதவீதம் அளவிலான வட்டி வருமானத்தை EPF கணக்கில் இருக்கும் மாத சம்பளக்காரர்களின் கொடுத்தது EPFO.

இந்த நிலையில் 1955 முதல் EPF கணக்கிற்கான வட்டி விகித வரலாறு உங்களுக்காக

  • 2021 - 2022 நிதியாண்டு : 8.10 சதவீத வட்டி
  • 2020 - 2021 நிதியாண்டு : 8.50 சதவீத வட்டி
  • 2019 - 2020 நிதியாண்டு : 8.50 சதவீத வட்டி
  • 2018 - 2019 நிதியாண்டு : 8.65 சதவீத வட்டி
  • 2017 - 2018 நிதியாண்டு : 8.55 சதவீத வட்டி
  • 2016 - 2017 நிதியாண்டு : 8.65 சதவீத வட்டி
  • 2015 - 2016 நிதியாண்டு : 8.80 சதவீத வட்டி
  • 2013 - 2015 நிதியாண்டு : 8.75 சதவீத வட்டி
  • 2012 - 2013 நிதியாண்டு : 8.50 சதவீத வட்டி
  • 2011 - 2012 நிதியாண்டு : 8.25 சதவீத வட்டி
  • 2010 - 2011 நிதியாண்டு : 9.50 சதவீத வட்டி
  • 2005 - 2010 நிதியாண்டு : 8.50 சதவீத வட்டி
  • 2004 - 2005 நிதியாண்டு : 9.50 சதவீத வட்டி
  • 2001 - 2004 நிதியாண்டு : 9.50 சதவீத வட்டி
  • 2000 - 2001 நிதியாண்டு : 12 சதவீத வட்டி
  • 1989 - 2000 நிதியாண்டு : 12.00 சதவீத வட்டி
  • 1988 - 1989 நிதியாண்டு : 11.80 சதவீத வட்டி
  • 1987 - 1988 நிதியாண்டு : 11.50 சதவீத வட்டி
  • 1986 - 1987 நிதியாண்டு : 11.00 சதவீத வட்டி
  • 1985 - 1986 நிதியாண்டு : 10.15 சதவீத வட்டி
  • 1984 - 1985 நிதியாண்டு : 9.90 சதவீத வட்டி
  • 1983 - 1984 நிதியாண்டு : 9.15 சதவீத வட்டி
  • 1982 - 1983 நிதியாண்டு : 8.75 சதவீத வட்டி
  • 1981 - 1982 நிதியாண்டு : 8.50 சதவீத வட்டி
  • 1979 - 1981 நிதியாண்டு : 8.25 சதவீத வட்டி
  • 1978 - 1979 நிதியாண்டு : 8.25 சதவீத வட்டி + 0.5% bonus
  • 1977 - 1978 நிதியாண்டு : 8.00 சதவீத வட்டி
  • 1976 - 1977 நிதியாண்டு : 7.50 சதவீத வட்டி
  • 1975 - 1976 நிதியாண்டு : 7.00 சதவீத வட்டி
  • 1974 - 1975 நிதியாண்டு : 6.50 சதவீத வட்டி
  • 1972 - 1974 நிதியாண்டு : 6.00 சதவீத வட்டி
  • 1971 - 1972 நிதியாண்டு : 5.80 சதவீத வட்டி
  • 1970 - 1971 நிதியாண்டு : 5.70 சதவீத வட்டி
  • 1969 - 1970 நிதியாண்டு : 5.50 சதவீத வட்டி
  • 1968 - 1969 நிதியாண்டு : 5.25 சதவீத வட்டி
  • 1967 - 1968 நிதியாண்டு : 5.00 சதவீத வட்டி
  • 1966 - 1967 நிதியாண்டு : 4.75 சதவீத வட்டி
  • 1965 - 1966 நிதியாண்டு : 4.50 சதவீத வட்டி
  • 1963 - 1964 நிதியாண்டு : 4.25 சதவீத வட்டி
  • 1957 - 1963 நிதியாண்டு : 4.00 சதவீத வட்டி
  • 1955 - 1957 நிதியாண்டு : 3.50 சதவீத வட்டி
  • 1952 - 1955 நிதியாண்டு : 3.00 சதவீத வட்டி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+