இந்தியாவின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி, வரி வசூல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் விரைவில் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயரும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சந்தை நிலவரத்தின் படி சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
5 டிரில்லியன் டாலர் ஜிடிபி
2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை வெளியிட்ட பின்பு தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் கூறுகையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபி அளவு 5 டிரில்லியன் டாலரை 2025ஆம் ஆண்டுக்குள் எட்டும், அதிகப்படியாக ஓரிரு வருடங்கள் தாமதமாகலாம் என்று கூறினார்,
சர்வதேச நாணய நிதியம்
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின் படி 2029ஆம் நிதியாண்டுக்குப் பின்பு தான் இந்தியா பொருளாதாரம் $ ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என முற்றிலும் மாறுபட்ட அளவீட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கணக்கீட்டில் சந்தேகம் உருவாகியுள்ளது.
2029 தான்
கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட IMF-ன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட டேட்டாபேஸ் தரவுகளின்படி, இந்தியாவின் நாமினல் ஜிடிபி 2028ஆம் நிதியாண்டில் 4.92 டிரில்லியன் டாலராக ஆக மட்டுமே உயர்ந்திருக்கும். எனவே, அடுத்த ஆண்டு அல்லது 2029ஆம் நிதியாண்டில் மட்டுமே இந்தியாவின் ஜிடிபி 5-ட்ரில்லியன் டாலர் அளவீட்டைத் தொடும் என அறிவித்துள்ளது.
4 வருட வித்தியாசம்
ஐஎம்எப் கணிப்பிற்கும் நரேந்திர மோடி அரசு நிர்ணயித்த இலக்கை மற்றும் கணிப்பிற்கும் சுமார் நான்கு ஆண்டுகள் வித்தியாசமாக இருக்கிறது. இது சர்வதேச முதலீட்டாளர்கள் பார்வையில் இந்தியாவின் மதிப்பீட்டைக் குறைப்பதாக இருந்தாலும், இந்தியச் சந்தையில் தொடர்ந்து முதலீடு குவிந்து வருகிறது.
மத்திய அரசு கணிப்பு
மத்திய அரசின் கணிப்புகள் படி இந்தியாவின் ரியல் ஜிடிபி வளர்ச்சியின் 8 சதவிகிதப் பாதையை நாம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டால், அது 8 சதவிகித டாலர் ஜிடிபி வளர்ச்சியாக மாறும். நாம் அதை விரிவுபடுத்தும் பட்சத்தில் 2025 நிதியாண்டில் நாமினல் ஜிடிபி அடிப்படையில் 5-ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்வோம் அல்லது 2026-27 நிதியாண்டில் தொடுவோம் என வி ஆனந்த நாகேஸ்வரன் பிப்ரவரி 1 அன்று தெரிவித்திருந்தார்.
2023 நிலவரம்
IMF கணிப்புகளின்படி, இந்தியாவின் நாமினல் ஜிடிபி அளவு ரூபாய் மதிப்பில் 2023ஆம் நிதியாண்டில் 13.4 சதவிகிதம் வளரும் என்று கணித்துள்ளது. இதுவே அமெரிக்க டாலர் மதிப்பில், 2023ஆம் நிதியாண்டில் நாமினல் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்எப் கணிப்பு
- 2022 நிதியாண்டு - 3.04 ட்ரில்லியன் டாலர்
- 2023 நிதியாண்டு - 3.29 ட்ரில்லியன் டாலர்
- 2024 நிதியாண்டு - 3.58 ட்ரில்லியன் டாலர்
- 2025 நிதியாண்டு - 3.89 ட்ரில்லியன் டாலர்
- 2026 நிதியாண்டு - 4.23 ட்ரில்லியன் டாலர்
- 2027 நிதியாண்டு - 4.57 ட்ரில்லியன் டாலர்
- 2028 நிதியாண்டு - 4.92 ட்ரில்லியன் டாலர்
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications