இந்த உலகில் அனைத்துமே மாற்றத்துக்கு உட்பட்டது தான். நாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது இருந்த வாழ்க்கையும் உலக நடப்புகளும் வேறு இப்போது இருக்கும் வாழ்க்கையும் உலக நடப்புகளும் வேறு. ஏஐ என ஒரு தொழில்நுட்பம் வரும் நம் வேலைகளையே புரட்டி போடும் என நாம் எதிர்பார்த்தோமா? இல்லை. அப்படி நம் இந்திய குடும்பங்களில் சத்தமே இல்லாமல் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.
இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான குடும்பங்களில் நிகழும் இந்த மாற்றம் சமூக பொருளாதார ரீதியாகவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வழக்கமாக ஒரு இந்திய மிடில் கிளாஸ் குடும்பம் எப்படி இருக்கும். பெரும்பாலும் தந்தை வேலைக்கு சென்று சம்பாதிப்பார் அம்மா வீட்டை மேலாண்மை செய்வார். தந்தை பணி ஓய்வு பெறும் வரை இது நடக்கும். பிள்ளைகள் படித்து வேலைக்கு சென்றாலும் தந்தை ஓய்வு வயது வரை உழைப்பார். அந்த வகையில் வீட்டின் முக்கியமான பிரெட் வின்னராக பல ஆண்டுகளுக்கு குடும்ப சுமையை தந்தையே சுமப்பார்.

ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தொழில்நுட்பங்களின் வருகையை காரணமாக கூறி ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய வண்ணம் இருக்கின்றன. நிறுவனங்கள் பணிநீக்கம் என்றவுடன் முதலில் கை வைப்பது 45 முதல் 55 வயது வரை இருப்பவர்களை தான். இந்த தலைமுறையினரை sandwich தலைமுறை என அழைக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வயதான பெற்றோர் இருப்பார்கள், அதே போல வளர்ந்து வரும் பிள்ளைகளும் இருப்பார்கள். இதற்கு மத்தியில் சொந்த வாழ்க்கையும் இருக்கும்.
நவீன பணிநீக்கங்கள் இவர்களுக்கு தான் சிக்கலை தருகின்றன. அதாவது இந்திய குடும்பங்களில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட தந்தை பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருப்பதும் குடும்பத்தின் மொத்த சுமையும் புதிதாக வேலைக்கு சென்ற ஜென் ஸீ பசங்க தலையில் விழுவதுமாக மாறியுள்ளது. அதாவது குடும்ப பொறுப்பு தந்தையிடம் இருந்து மகனுக்கு செல்கிறது.
அதுவரை தந்தையின் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பராமரிக்கப்பட்ட குடும்பம் இனி மகனின் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பராமரிக்கப்பட வேண்டும். பல நகரங்களிலும் இந்திய குடும்பங்களில் தற்போது இதுதான் நிலைமை. 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் வேலை இல்லாமல் இருப்பதும் 25 வயதுகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் வேலைக்கு செல்வதுமாக நிலைமை மாறி இருக்கிறது.

வீட்டின் ஒரே பிரெட் வின்னராக ஜென் ஸீ தலைமுறையினர் தான் தற்போது தலையெடுத்து இருக்கிறார்கள். இது இந்தியாவின் சமூக பொருளாதார போக்கையே மாற்றி அமைக்கிறது. இந்தியாவில் படித்து வேலை தேடக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது இதனால் 45 லிருந்து 55 வயதுக்குட்பட்ட நபர்களின் வேலைக்கு கேரண்டி இல்லாமல் போய்விட்டது. அனுபவம் அதிகம் என்பதால் நிறைய சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் இவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே இளைஞர்கள் என்றால் இவர்களுக்கு கொடுக்கக்கூடிய சம்பளத்தை கொண்டு மூன்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரலாம்.இப்படித்தான் நிறுவனங்கள் சிந்திக்கின்றன.
இந்தியாவில் ஃபிரஸ்ஸர் நிலையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் விகிதம் அதிகரித்து இருக்கிறது, ஆனால் மூத்த நிலையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்த கூடிய விகிதம் 15 % தேக்கமடைந்து இருக்கிறது என்கிறது ஃபவுண்டிட் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை.
இனிவரும் நாட்களில் நிலைமை இப்படி தான் இருக்க போகிறதாம். இது குடும்பங்கள் செயல்படும் விதத்தையே மாற்றி அமைக்கிறது. தந்தைக்கு இதுநாள் வரை கிடைத்த முக்கியத்துவம் கிடைக்காமல் போவதாக உணர்கிறார், மகனோ அல்லது மகளோ அதிக நிதிச்சுமை தலையில் விழுந்ததாக உணர்கிறார்கள். இந்நிலையில் தான் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்பவர்கள் அவ்வப்போது குடும்பத்தினரோடு அமர்ந்து பணி சூழல்களையும் நிதி சூழல்களையும் கலந்து பேசி நிலைமையை ஒருவொருக்கு ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என மனநல ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
குறிப்பாக பணிநீக்கம், சேமிப்பு, முதலீடு போன்ற தகவல்களை ஒருபோதும் குடும்பத்தினரிடம் மறைக்க கூடாது என எச்சரிக்கின்றனர். ஏனெனில் இதுதான் பின்னாளில் பெரிய பிரச்சினையை உண்டாக்கும் என்பதால் குடும்பத்தினரிடம் ரகசியம் வேண்டாமே என்கின்றனர்.
More From GoodReturns

டிகிரியே இல்லாமல் BMW-இல் வேலை பெற்ற 19 வயது இந்திய இளம்பெண்..! காலம் மாறி போச்சு பாஸ்..!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications