சென்னை: இந்தியாவில் இது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான சீசன் . இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கலில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை தங்களுடைய அமைப்புகளில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் வரி செலுத்துவோருக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதற்காகவும் தான் வருமான வரித்துறை இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்திருக்கிறது.
வருமான வரி தாக்கல்: வழக்கமாக இந்தியாவில் வருமான வரி கணக்கினை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்துவிட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை சேர்ந்த சம்பளம் வாங்க கூடிய தனி நபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டும்.

கடைசி நாள்: அடுத்ததாக தொழில் புரிபவர்கள், தொழில் நிபுணர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும். மேலும் திருத்தப்பட்ட வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
என்னென்ன மாறியுள்ளது?: இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கலில் பல மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக புதிய வரி கணக்கு நடைமுறையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய வரி நடைமுறையில் நிலையான வரி கழிவு 75,000 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள் எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லாத வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மூலதன ஆதாய வரி : மூலதன ஆதாய வரி கணக்கிடும் முறையில் சில மாற்றங்கள் 2024 ஜூலை 23ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. ஒரு சொத்தினை 12 மாதங்களுக்குள் வைத்திருந்து விற்பனை செய்தால் அதில் கிடைக்கும் ஆதாயத்திற்கு குறுகிய கால ஆதாய வரியும், 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்திற்கு நீண்ட கால ஆதாய வரி விதிக்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் லாபம்: இந்தியாவில் தற்போது நீண்ட கால மூலதன ஆதாயவரி என்பது 12.5% ஆக கணக்கீடு செய்யப்படுகிறது அதுவே குறுகிய கால ஆகாய வரியை பொருத்தவரை ஈக்விட்டி உள்ளிட்ட நிதி சொத்துக்களில் இருந்து கிடைக்கக் கூடிய லாபத்திற்கு 20 சதவீதமாக விதிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் முதலீடுகளில் கிடைத்த லாபத்திற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி 20%இல் இருந்து 12.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது, இண்டெக்ஷேசன் பலன்கள் நீக்கப்பட்டுள்ளன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications